Friday, February 13, 2026
HomeMurugar Songsஉலகங்கள் யாவும் உன் அரசாங்கமே பாடல் வரிகள் | ulagangal yaavum un arasaangame

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே பாடல் வரிகள் | ulagangal yaavum un arasaangame

Title : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே! முருகன் பாடல் வரிகள் : படம்: திருவருள் .இசை: குன்னக்குடி வைத்தியநாதன்

பாடல் வரி: கண்ணதாசன். குரல்: TMS. Ulagangal Yaavum Un Arasaangame; Movie | Thiruvarul | Sung By | T.M.Soundararajan | Music | Kunnakudi Vaidhyanathan – TM Soundarrajan – Murugan Devotional Song lyrics

============

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே!

ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே!

நிதி வேண்டும் ஏழைக்கு – மதி வேண்டும் பிள்ளைக்கு

நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்!

(உலகங்கள் யாவும் உன்)

மனம் உள்ளவர் குணம் உள்ளவர் – மனதுக்குச் சுகம் வேண்டும்!

தனம் உள்ளவர் அதில் பாதியை – பிறருக்குத் தர வேண்டும்!

ஆறெங்கும் நீர் விட்டு – ஊரெங்கும் சோறிட்டு

பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே!

உந்தன் வரம் வேண்டுமே!

(உலகங்கள் யாவும் உன்)

பாடு பட்டவன் பாட்டாளி – அவன் மாடிக்கு வர வேண்டும்!

பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் – பாரதம் பெற வேண்டும்!

நாடெங்கும் சேமங்கள் – வீடெங்கும் லாபங்கள்

நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே! – முருகா

அருள் வேண்டுமே! – திருவருள் வேண்டுமே!

முருகனருள் வேண்டுமே!

இந்த | ulagangal yaavum un arasaangame பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல் உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments