Title : திருத்தணி மலையினிலே திருநாளாம் | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் திருத்தணி மலையினிலே திருநாளாம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

திருத்தணி மலையினிலே திருநாளாம் திருப்புகழ் பாடிடும் பெருநாளாம் -‘பத்மஸ்ரீ’ யேசுதாஸ் பாடிய முருகன் பாடல் வரிகள். Thiruthani malaiyinile thirunaalam thirupugazh paadidum perunalam song lyrics by K J Yesudas Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics

============

திருத்தணி மலையினிலே திருநாளாம்

திருப்புகழ் பாடிடும் பெருநாளாம்

திருப்படி உற்சவம் சிவன்மகன் பொற்பதம்

தேரினில் வலம்வரவே அற்புதம் (தித்தணி)

ஆடிமாதக் கார்த்திகையில் அன்பரெல்லாம் தேடிவந்து

பாடியே படிகளிலே பக்திசுவைப் பெருக்கிடுவார்

சரவணன் பொய்கை தனில் அழகிய முருகனுமே

திருவிழா நாளினிலே தெப்பத்தில் வலம்வருவான்

காவடிகள் ஆடிவந்து கந்தனின் திருவடியை

நாடியவர் வேண்டியதை தந்து மகிழ்வான் (திருத்தணி)

தைப்பூசத் திருநாளில் கொட்டுமேளம் முழங்கிடவே

கூட்டம் மாலையுடன் கோடிகோடி மாந்தர்வர

தணிகையில் அமர்ந்திருந்து தரணியில் நலம் விளங்க

கனிவுடன் வேண்டியதை கந்தனும் அருளிடுவான்

சித்திரையின் பௌர்ணமியில் முழுமதி வானில்லவர

சாந்தமுடன் முருகனும் காட்சிதருவான் (திருத்தணி)

இந்த திருத்தணி மலையினிலே திருநாளாம் | thiruthani malaiyinile thirunaalam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், K. J. Yesudas, Murugan songs திருத்தணி மலையினிலே திருநாளாம் திருத்தணி மலையினிலே திருநாளாம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment