Title : பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி பச்சைமயில் மீதினிலே -‘பத்மஸ்ரீ’ யேசுதாஸ் பாடிய முருகன் பாடல் வரிகள். Pazhamuthircholaithanil painthamizhil paadi pachai mayil meethinile song lyrics by K J Yesudas Songs – Lord Murugan Devotional songs Tamil Lyrics
============
பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி
பச்சைமயில் மீதினிலே அமர்ந்திருந்தான் தேவன்
அழகான எழில்மாது தெய்வானை குறமாது வள்ளியுமே அருகினிலே
நிலையாக அமர்ந்திருந்து அருள்தந்திடு அனுதினமும்
தொழுவோம் முருகா (பழமுதிர்)
கைகுவித்து நீரணிந்து மெய்யுருக வேண்டுவோர்க்கு
வையகத்தில் வேண்டியதை வேலவனும் தந்திடுவான்
தத்துவத்தின் முதற்பொருளை பக்தியுடன் நெஞ்சில் வைத்தால்
வித்தகனாய் விளங்கிடவே புத்திதந்து காத்திடுவான்
கந்தய்யா முருகய்யா வேலய்யா வா வா
குமரய்யா கார்த்திகேயா செல்லய்யா வாவா
அடியவர் குறைதீர்த்து ஆனந்த வாழ்வு தந்து
எந்நாளும் நன்னாளாய் ஏற்றமுடன் இசைச்செல்வம் தனை அருள்வாய் (பழமுதிர்)
எழுகின்ற மூச்சினிலே இருக்கின்ற முருகனையே
இதயத்தின் கோவிலிலே என்றும் வணங்கிடுவோம்
செல்லெடுத்து இசைதொடுத்து சுவையுடன் பாடிடவே
கண்திறந்து கைகொடுத்து அஞ்சேல் என்றிடுவான்
கந்தய்யா முருகய்யா வேலய்யா வாவா
குமரய்யா கார்த்திகேயா செல்லய்யா வாவா
நெடுமாள் மருகோணை நீலமயில்வானனை
நேசமுடன் வேண்டிநின்றால் நிச்சயமாவே இச்சமயம் வருவான் (பழமுதிர்)
இந்த பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி | pazhamuthircholaithanil painthamizhil paadi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், K. J. Yesudas, Murugan songs பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி பழமுதிர் சோலைதனில் பைந்தமிழில் பாடி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…