Friday, January 16, 2026
HomeMurugar Songsபச்சை மயில் வாகனனே - சிவ பால சுப்ரமணியனே வா | pachai mayil vaahanane...

பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா | pachai mayil vaahanane shiva balasubramanyane

Title : பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா – முருகன் பாடல் / ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Pachai Mayil Vaahanane Shiva Balasubramanyane Vaa – Murugan Songs / Ayyappan Bhajan song Tamil Lyrics

============

பச்சை மயில் வாகனனே – சிவ

பால சுப்ரமணியனே வா

இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்

எள்ளளவும் பயமில்லையே

—- பச்சை

கொச்சை மொழியானாலும் – உன்னை

கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்

சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்

சாந்தம் நிறைந்ததப்பா

—- பச்சை

நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு

நேர்மையெனும் தீபம் வைத்து

செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா

சேவல் கொடி மயில் வீரா

—- பச்சை

வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்

தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍ நீ

மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்

கள்ளமெல்லாம் கரைந்ததப்பா

—- பச்சை

ஆறுபடை வீடுடையவா

எனக்கு ஆறுதலை தரும் தேவா (2)

நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா

எங்கும் நிறைந்தவனே

நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா

எங்கும் நிறைந்தவனே —- பச்சை

அலைகடல் ஓரத்திலே – என்

அன்பான சண்முகனே – நீ

அலையா மனம் தந்தாய் – உனக்கு

அனந்த கோடி நமஸ்காரம்.

நீ அலையா மனம் தந்தாய்

உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.

பச்சை மயில் வாகனனே – சிவ

பால சுப்ரமணியனே வா

இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்

எள்ளளவும் பயமில்லையே முருகா

எள்ளளவும் பயமில்லையே

—- பச்சை

இந்த பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா | pachai mayil vaahanane shiva balasubramanyane பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், பஜனை பாடல் வரிகள், Pillayar bhajan, Ayyappan Bajanai Paadal, ஐயப்பன் பஜனை பாடல், முருகன் பாடல் வரிகள், Murugan songs பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா பச்சை மயில் வாகனனே – சிவ பால சுப்ரமணியனே வா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments