Muruganukkorunal Thirunal Andha Mudhalvanin Vaibava Perunal இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் முருகனுக் கொருநாள் திருநாள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
முருகனுக் கொருநாள் திருநாள் அந்த முதல்வனின் வைபவப் பெருநாள் முருகன் பாடல் வரிகள். Muruganukku orunal Thirunal Andha Mudhalvanin Vaibava Perunal Murugan Devotional Song Tamil lyrics.
============
முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் … )
கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்
(முருகனுக் கொருநாள் … )
வைகாசி விசாகத் திருநாள்
அந்த வண்ணக் கதிர்வேலன் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்
வடிவேல் குமரனின் திருநாள்
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்
கந்த சஷ்டிக்கொருத் திருநாள்
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
கந்த சஷ்டிக்கொருத் திருநாள்
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் … )
சரவணன் பிறந்தத் திருநாள்
அருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள்
செந்தூர் வாசலில் ஒருநாள்
கந்தன் காவடி ஆடிடும் பெருநாள்
வள்ளிக் குமரனின் மண நாள்
நம் வாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்
முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்
இந்த | muruganukku oru naal thirunaal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs முருகனுக் கொருநாள் திருநாள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…