Saturday, March 14, 2026
HomeMurugar Songsமண்ணுக்கும் விண்ணுக்கும் பாடல் வரிகள் | mannukkum vinnukkum naduvirundhu

மண்ணுக்கும் விண்ணுக்கும் பாடல் வரிகள் | mannukkum vinnukkum naduvirundhu

Mannukkum Vinnukkum Naduvirundhu இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து முருகன் பாடல் வரிகள். Mannukkum Vinnukkum Naduvirundhu – TM Soundarrajan – Murugan Devotional Song lyrics

============

மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து

மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து

கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும்

கந்தனே நீ ஒரு கற்கண்டு! (2)

குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ

குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ

மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2)

என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ

(மண்ணுக்கும் விண்ணுக்கும்)

பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ

பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ

பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2)

தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ

(மண்ணுக்கும் விண்ணுக்கும்)

இந்த | mannukkum vinnukkum naduvirundhu பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல் மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments