Title : கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் | tamilgod.org இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கந்தன் காலடியை வணங்கினால் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே முருகன் பாடல் வரிகள்.Thiruparankundrathil Nee Sirithal Muruga – Kandhan Karunai fim song lyrics – Lord Murugan Devotional songs Tamil Lyrics. Movie | Thiruvarul | Sung By T.M.Soundararajan | Music | Kunnakudi Vaidhyanathan

============

கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

கந்தன் காலடியை வணங்கினால்

தந்தை பரமனுக்கு சிவகுருநாதன்

தாயார் பார்வதியின் சக்தி தானே வேலன்

சிவசக்தி தானே வேலன்

அண்ணனவன் கணேசன் கண்ணனவன் தாய்மாமன்

மாமனுக்கு பிள்ளையில்லை மருமகன் தான் திருமகன் (கந்தன் காலடியை)

உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாக்ஷி

உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி

கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாக்ஷி

அன்னையர்கள் பலருண்டு அவனுக்கினை எவனுண்டு

கந்தன் காலடியை வணங்கினால்

கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே

ப்ரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே

அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே

அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்

கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்

கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்

வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள் (கந்தன் காலடியை)

இந்த கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் | kandhan kaladiyai vananginal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல் கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் கந்தன் காலடியை வணங்கினால் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment