Monday, December 8, 2025
HomeAyyappan Songsவந்தான் கருப்பன் விளையாட | vandhan karuppan vilayaada song tamil lyrics

வந்தான் கருப்பன் விளையாட | vandhan karuppan vilayaada song tamil lyrics

Vandhan Karuppan Vilayaada tamil lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வந்தான் கருப்பன் விளையாட காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வந்தான் கருப்பன் விளையாட

வாளில் ஏறி நினறாட

வந்தான் கருப்பன் விளையாட

வாளில் ஏறி நினறாட (வந்தான்)

வாளும் வேலும் விளையாட

வாளில் ஏறி நின்றாட

சுக்கு மாந்தடி சுழன்றாட

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

காலில் சலங்கை கலகலக்க

கையில் வாளும் பளபளக்க

முறுக்கு மீசை துடி துடிக்க

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

பாலும் சோறும் கமகமக்க

பள்ளையம் இங்கே ஜொலி ஜொலிக்க

பிள்ளைகள் நாங்கள் கொண்டாட

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

சந்தனக் கருப்பன் தானாட

சங்கிலிக் கருப்பன் உடனாட

பதினெட்டாம் படி கருப்பனுமே

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

முன்னோடியுமே ஓடிவர

நொண்டியும் இங்கே ஆடிவார

பதினெட்டாம் படி கருப்பனுமே

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

கொரட்டி எனும் ஓர் ஆலயமாம்

கூடி இருப்பவன் சாஸ்தாவாம்

தங்கையும் அங்கே அருகிருக்க

தரணியை காக்க வந்தவனாம் (வந்தான்)

இந்த வந்தான் கருப்பன் விளையாட | vandhan karuppan vilayaada song tamil lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது கருப்பசாமி பாடல்கள், Veeramanidaasan Ayyappan Songs, Karuppasamy Songs, பாடல் வரிகள் வந்தான் கருப்பன் விளையாட வந்தான் கருப்பன் விளையாட போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments