Vaaraaraiyaa Vaaraaru Karuppanna Swamy thuthi padal lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கருப்பர் வாரார் : வாராரய்யா வாராரு கருப்பரிங்கே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
கருப்பர் வாரார்
வாராரய்யா வாராரு கருப்பரிங்கே வாராரு
வாராரய்யா வாராரு கருப்பரிங்கே வாராரு
அள்ளி முடிச்ச கொண்டயப்பா
அழகு மீசை துள்ளுதப்பா
வெள்ள வேட்டிப்பட்டுடனே
வாரார் ஐயா ராசாப்போல. (வா).
ஆளுயர அரிவாளாம்
அதுக்கேத்த கம்பீரமாம்
காலிலே முள்ளுச்செருப்பாம்
கருப்பனுக்கே தனிச்சிறப்பாம். (வா).
வீச்சரிவாள் கையிலுண்டு
வேகமான குதிரையுண்டு
சுற்றிவரும் பகையழிக்கச்
சுக்கு மாந்தடியுமுண்டு. (வா).
இடுப்பிலே சலங்கையுண்டு
இடிமுழக்கச் சிரிப்புமுண்டு
வாக்கிலே வலிமையுண்டு
வற்றாத வலிமையுண்டு. (வா).
கையிலே சவுக்குமுண்டு
கனகமணிச் சலங்கையுண்டு
பாற்கடலில் பள்ளிகொண்ட
பரந்தாமன் நாமமுண்டு. (வா).
சந்தனமுண்டு ஜவ்வாதுண்டு
சாம்பிராணி வாசமுண்டு
சம்பங்கி ரோஜா முல்லை
மணக்குதப்பா இங்கே இப்போ. (வா).
இந்த கருப்பர் வாரார் : வாராரய்யா வாராரு கருப்பரிங்கே | vaaraaraiyaa vaaraaru karuppanna swamy thuthi padal lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது கருப்பசாமி பாடல்கள், Karuppasamy Songs, பாடல் வரிகள் கருப்பர் வாரார் : வாராரய்யா வாராரு கருப்பரிங்கே கருப்பர் வாரார் : வாராரய்யா வாராரு கருப்பரிங்கே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…