Thedukindra Kangalukkul Song Lyrics Tamil
தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி பாடல் வரிகள் இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி காணொளி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…
தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி
ஐயப்ப சுவாமி அருள் புரி சுவாமி
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி
கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள்
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – என்மேல்
அன்பு வைத்து நதிவரைக்கும் ஓடிவந்தாயே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி
தந்தையுண்டு அன்னையுண்டு உந்தன் வடிவிலே
அன்புகொண்டு தந்தைக்கவன் செய்யும் பணியிலே – நாங்கள்
ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி
ஐயப்ப சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி
இந்த தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி | thedukindra kangalukkul oodi varum swamy பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள் தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…
பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்
தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி காணொளி