Ganapathi endrida kalangum valvinai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கணபதி என்றிட கலங்கும் வல்வினை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
கணபதி என்றிட கலங்கும் வல்வினை, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய கணபதி பாடல் வரிகள்.Ganapathi endrida kalangum valvinai – Sree Ganesha song Lyrics. Singer Seerkazhi Govindarajan.
கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே
============
காக்கும் கடவுள் கணேசனை நினை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருள் துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்
அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்
ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்
காக்கும் கடவுள் கணேசனை நினை
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்
நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்
ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்
உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்
காக்கும் கடவுள் கணேசனை நினை
கவலைகள் அகல அவன் அருளே துணை
காக்கும் கடவுள் கணேசனை நினை
இந்த | ganapathi endrida kalangum valvinai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Sree Ganesha Songs, கணபதி பாடல்கள் கணபதி என்றிட கலங்கும் வல்வினை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…