Bhagavan saranam lyrics in tamil

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் (Bhagavan Saranam Bhagavathi Saranam lyrics in tamil) இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் காணொளி இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவின் இறுதியில் உள்ளது….

பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா ஐயப்பன் பாடல் வரிகள். Bhagavan Saranam Bhagavathi Saranam – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா

கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருணையப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா
மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா

ஆறுவாரம் நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண‌ வந்தோம்

பால் அபிஷேகம் உனக்கப்பா
பாலகனைக் கடைக்கண் பாரப்பா
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
கற்பூர‌ தீபம் உனக்கப்பா உன்
பொற்பத‌ மலர்கள் எனக்கப்பா

தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதமப்பா

நெய்யபிஷேகம் உனக்கப்பா உன்
திவ்ய‌ தரிசனம் எமக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா அருள்
செய்யப்பா மனம் வைய்யப்பா

பகவான் சரணம் பகவதி சரணம்
பகவானே பகவதியே தேவனே தேவியே
ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம்

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

இந்த பகவான் சரணம் பகவதி சரணம் | bhagavan saranam bhagavathi saranam ayyappa பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் பகவான் சரணம் பகவதி சரணம் பகவான் சரணம் பகவதி சரணம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள்

108 ஐயப்பன் சரணம்

Leave a Comment