Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா – வீரமணி ராஜூ பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Thalladi Thalladi nadai nadanthu Naanga Sabarimalai Vanthomayya – Veeramani Raju Ayyappan Devotional songs Tamil Lyrics

============

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து

நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு

காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு

சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா

நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

சாமி… (தள்ளாடி தள்ளாடி)

இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு

சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு

ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு

வேடிக்கையாய் நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு

சாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்

சாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்

பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு வேடிக்கையாய்

நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

காணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு

காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு

காணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு

காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு

பக்தரெல்லாம் கூடி நின்று

பஜனைகளெல்லாம் பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு

நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு

நெஞ்ச‌ம் முழுதுமே உந்தன் நினைப்பதுமே மாத்திக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

படியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து

பகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு

நெய்யிலே குளிப்பதையும் நேரிலே பாத்துவிட்டு

ஐயா சரணம் என்று ஆனந்தமா பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)

சாமியே,…. சரணம் ஐயப்போ………..

சாமியே,…… சரணம் ஐயப்போ ………….

சாமியே,…… சரணம் ஐயப்போ ………….

சாமி சரணம் ஐயப்ப‌ சரணம்

இந்த தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை | thalladi thalladi nadai nadanthu naanga sabarimalai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க‌ சபரிமலை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment