Monday, January 19, 2026
HomeAyyappan Songsசரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள் | saranamappa saranam ayya swamiye lyrics tamil

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள் | saranamappa saranam ayya swamiye lyrics tamil

Saranamappa Saranamayya Swamiye Ayyappan Bhajanai Songs Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்!! saranamappa saranam ayya swamiye lyrics காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே. Saranamappa Saranamayya Swamiye | Ayyappan Bhajanai Tamil | Devotional songs Tamil Lyrics

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே

இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..

நெற்றியிலே நீரணிந்து நீல ஆடை தாங்கியே

சுற்றிவந்து ஐயன் பதம் தேடினேன் அந்த

சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன்.

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே

இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)

பவக்கடலை கடந்து சென்று பரமனடி சேர்ந்திடவே

தவக்கலமாம் துளசி மாலை தாங்கினேன் – இந்த

தாரணியில் உன் புகழைப் பாடினேன்.

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே

இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)

ஸ்வாமி திந்தக்கத்தோம் ஐயப்பா திந்தக்கத்தோம்

ஐயப்பா திந்தக்கத்தோம் ஸ்வாமி திந்தக்கத்தோம்

சரமெடுத்து தீர்த்தமாடி வேட்டையாடி கூட்டம் கூடி

பேட்டையிலே துள்ளிவந்தேன் ஸ்வாமியே – அது

பேரானந்தம் பேரானந்தம் ஸ்வாமியே…

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே

இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)

இருமுடியும் தாங்கிக் கொண்டு பெருவழியில் நடக்கையிலே

கரிமலையில் கதறுகிறேன் ஐயனே

காத்தருள வேண்டுகிறேன் மெய்யனே

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே

இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)

பாவனமாய் பம்பா தன்னில் பாலகனே உன்னைக் கண்டு

பாட்டுப் பாட பாவ வினை போகுதே

பக்தியோடு கை உனையே கூப்புதே

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே

இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)

ஆறு வாரம் நோன்பிருந்து ஆறு மூன்று படியேறி

ஆரவாரம் கூட்டத்துக்கு நடுவிலே

ஆனந்தமாய் தரிசனமும் காண்பேனே

சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே

இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே..(Chorus)

இந்த | saranamappa saranam ayya swamiye lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Ayyappan Bajanai Paadal, ஐயப்பன் பஜனை பாடல் சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்!! saranamappa saranam ayya swamiye lyrics போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments