Friday, February 13, 2026
HomeAyyappan Songsபோனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம் | ponal sabarimala kettal saami saranam

போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம் | ponal sabarimala kettal saami saranam

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம் பார்த்தால் ஐயனை பார்க்க வேண்டும் – ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Ponal Sabarimala kettal Saami saranam Tamil Lyrics

சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம்

சாமி திங்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம்

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பள்ளிக்கட்டு சபரிமலைக்கு

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

============

போனால் சபரிமலை கேட்டால் சரண கோஷம்

பார்த்தால் ஐயனை பார்க்க வேண்டும் நாம்

பார்த்தால் ஐயப்பனை பார்க்க வேண்டும். (போனால் )

மனம் திறந்தால், உள்ளம் நினைத்தால்

வாய் சொன்னால், கதி என்றால் அந்த

“சாமி சரணம்” என்ற ஒன்றே நிலைக்க வேண்டும்

சாமி சரணம் என்ற ஒன்றே நிலைக்க வேண்டும். (போனால் )

உள்ளத்தில் இருப்பதை மெல்லத் தெளித்தால்

சாமி சரணம் ஐயப்ப சரணம்

வெள்ளப் பெருக்கத்தைப் போல் ஐயப்பன் புகழ்

சாமி சரணம் ஐயப்ப சரணம்

பள்ளம் மேடுதனைப் பார்த்து நடந்தால்

சாமி சரணம் ஐயப்ப சரணம்

கள்ளம் அற்றவன் காத்து ரக்ஷிப்பான்

சாமி சரணம் ஐயப்ப சரணம். (போனால் )

பம்பை நதியில் மூழ்கி குளித்து

சாமி சரணம் ஐயப்ப சரணம்

சிந்தையில் ஐயன் ஐயப்பனையே நினைந்து

சாமி சரணம் ஐயப்ப சரணம்

ஐந்து மலை ஏறி மேனி சிலிர்த்து

சாமி சரணம் ஐயப்ப சரணம்

ஐயப்பன் மெய்யப்பன் தன்னருள் கண்டு

சாமி சரணம் ஐயப்ப சரணம். (போனால் )

இந்த | ponal sabarimala kettal saami saranam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal போனால் சபரிமலை கேட்டால் சாமி சரணம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments