Omkara Natham Uyarvana Vedam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம் ஐயப்பன் பாடல் வரிகள். Omkara Natham Uyarvana Vedam – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்

தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம் (ஓங்கார‌)

ஒருகோடி தீபம் ஒளிவீசும் கோலம்

அருளாகத் தோன்றும் ஐயா உன் ரூபம்

பனிதூவும் மாதம் மணிமாலை போடும்

மனம் யாவும் பாடும் தேவா உன்கோஷம் (ஓங்கார‌)

பம்பாவின் நீரில் பிணியாவும் தீரும்

படியேறும் போதே நலம் கோடி சேரும்

மலையெங்கும் வீசும் அபிஷேக‌ வாசம்

மனைவாழச் செய்யும் மணிகண்ட‌ கோஷம் (ஓங்கார‌)

காலங்கள் தோறும் உன் நாமம் பாடும்

மனமொன்று போதும் வேறென்ன‌ வேண்டும்

இல்லங்கள் தோறும் நீ தானே தெய்வம்

என்றென்றும் சொல்வோம் சாஸ்தா உன் சரணம் (ஓங்கார‌)

இந்த ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் | omkara natham uyarvana vedam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment