Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் ஐயப்பன் பாடல் வரிகள். Kuzhathupulaiyil Unnai Kandal – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

குளத்துப்புழையில் உன்னைக் கண்டால்

குடும்பம் தழைக்குமே எங்கள்

குடும்பம் தழைக்குமே

அச்சன் கோவிலில் ஐயனைக் கண்டால்

அச்சம் விலகுமே எங்கள்

அச்சம் விலகுமே (குளத்துப்புழையில்)

ஆரியங்காவில் பூசைகள் செய்தால்

அன்புகிடைக்குமே அவன் ஆசி கிடைக்குமே

கோரியபடியே யாவும் கிடைக்கும்

குலம் செழிக்குமே நம்ம‌

குலம் செழிக்குமே (குளத்துப்புழையில்)

பந்தள‌ நாட்டு பாலன்மீது பாடல் பிறக்குமே

ஒரு பாடல் பிறக்குமே

பக்தி நெறியில் பாடும் போது சாந்தி கிடைக்குமே

அழுதை நதியில் களங்கம் தீர‌ குளிக்க‌ வேண்டுமே

அன்பர் குளிக்க‌ வேண்டுமே

குளிக்கும் வேளை அகத்திலுள்ள‌ ஐயம்

அகலுமே நல்ல‌ அறிவு பெருகுமே (குளத்துப்புழையில்)

பம்பையிலே நீராடி விளக்கை ஏற்று

பலனும் கிடைக்குமே நல்ல‌

பயனும் கிடைக்குமே

சபரிமலையின் மகரஜோதி வானில் தெரியுமே

நம் வாழ்வில் தெரியுமே

படிகள் ஏறி அவனைக் காண‌ அபயம் கிடைக்குமே

அவன் சரணம் கிடைக்குமே

துதிகள் பாடி தரிச்ப்போருக்கு ஞானம்

பிறக்குமே அஞ்ஞானம் மறக்குமே (குளத்துப்புழையில்)

கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ‘கன்னிமலை சாமி சரணம் சொல்லும்சாமி’ ஐயப்பன் பாடலின் வரிகள்.கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள்.

இந்த குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் | kuzhathupulaiyil unnai kandal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் குளத்துப்புழையில் உன்னைக் கண்டால் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment