Aum Bhadram Karnebhi Tamil Lyrics (Shanti Mantra From The Mandukya Upanishad) இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சாந்தி மந்திரம் | ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம்
பச்யேமாக்ஷபிர் யஜத்ரா; ஸ்திரைரங்கைஸ்
துஷ்ட்டுவாக்ம்ஸஸ்தனூபி: வ்யசேம தேவஹிதம் தாயு;
ஸ்வஸ்தி ந இந்த்ரோ வ்ருத்த ச்ரவா; ஸ்வஸ்தி
ந;பூஷா விச்வ
வேதா; ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்ட்டநேமி; ஸ்வஸ்திநோ ப்ருஹஸ்பதிர் ததாது
ஓம் சாந்தி; சாந்தி; சாந்தி;
============
மாண்டூக்ய உபநிஷதம் : சாந்தி மந்திரம் விளக்கம்
மாண்டூக்ய உபநிஷதம் என்றால் இதனை அருளிய முனிவரின் பெயரால் . இது மாண்டூக்ய உபநிஷதம் எனப்படுகிறது.
தேவர்களே, காதுகளால் நாங்கள் நல்ல விஷயங்களை கேட்க வேண்டும். வணங்கத் தகுநதவர்களே, கண்களால் நல்ல விஷயங்களை காண வேண்டும். உறுதியான அவயங்களுடன் கூடிய உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களை துதிக்க வேண்டும். தேவர்களுக்கு நன்மை செய்தபடி வாழ வேண்டும். புகழுடைய இந்திரன் நமக்கு நன்மை செய்யட்டும். எல்லாம் அறிந்த சூரியன் நமக்கு மங்கலம் செய்யட்டும். தீமையை அழிக்கும் கருடன் நமக்கு நன்மை செய்யட்டும். பிரகஸ்பதி நமக்கு நன்மை தரட்டும்.
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||
ஒன்றென்றிரு
இந்த உலகம் அனைத்தும் ஓங்காரமே. சென்றவை, இருப்பவை, வருபவை எல்லாம் ஓங்காரமே. மூன்று காலத்தையும் கடந்ததாக எது உள்ளதோ அதுவும் ஓங்காரமே.
இவை அனைத்தும் இறைவனே. ஆன்மாவும் இறைவனே. இவ் ஆன்மா நான்கு வகைகளை உடையது.
ஆன்மாவின் முதல் வகை வைசுவானரன். இதன் உணர்வு புறமுகமாக உள்ளது. வைசுவானரன் ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய்களுடன் விழிப்பு நிலையில் புறஉலகை அனுபவிக்கிறான். [அங்கம் – 5 பூதம், சூரியன், சொர்க்கம்] [ 19 வாய் – ஞானந்தேரியம் 5, கர்மேந்திரியம் 5, முக்கிய பிராணங்கள் 5, மனம், புத்தி, நான் என்ற உணர்வு, சித்தம்]
ஆன்மாவின் இரண்டாம் வகை தைஜஸன். இதன் உணர்வு அகமுகமாக உள்ளது. தைஜஸன் ஏழு அங்கங்களும் பத்தொன்பது வாய்களுடன் கனவு நிலையில் மன உலகை அனுபவிக்கிறான்.
ஆன்மாவின் மூண்றாம் வகை ஆசைகளோ கனவுகளோ இன்றி ஆழ்ந்து தூங்குங்கின்ற நிலை ஆகும். இவ்நிலையை அனுபவிப்பவன் பிராஜ்ஞன். இந்த நிலையில் அனுபவங்கள் எதுவும் இல்லை. உணர்வு திரண்டு ஒரு திரளாக உள்ளது. எனவே இது விழிப்பு மற்றும் கனவு நிலையின் வாசலாக உள்ளது. ஆனந்த வடிவுள்ள பிராஜ்ஞன் இங்கே ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
அனைத்திற்கும் தலைவன் இவனே. அனைத்தையும் அறிந்து, அனைத்து உயிர்களும் உள் நின்று இயங்குபவன் இவனே. அனைத்திற்கும் மூலகாரணமாகவும், உயிர்களின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாணவனும் இவனே.
ஆன்மாவின் நான்காம் வகை அகமுக நிலையும் அல்ல, புறமுக நிலையும் அல்ல, இரண்டும் சேர்ந்த நிலையும் அல்ல. அது உணர்வு திரண்ட நிலையும் அல்ல, உணர்வுவற்ற நிலையும் அல்ல. அதனைக் காண முடியாது. செயல்களற்ற, புரிய முடியாத, அடையாளங்களற்ற, விளக்க முடியாத நிலை அது. அதனை ஆன்ம , உணர்வால் மட்டுமே அறிய முடியும். அங்கு பிரபஞ்ச உணர்வு இல்லை. அது அமைதிமயமானது. மங்கலமானது. இரணடற்றது. இதுவே நான்காம் வகை. இது ஆன்மா. இதையே அறிய வேண்டும்.
இந்த ஆன்மாவை ஒரு சொல்லால் குறிப்புடுவதுவே ஓம் என்னும் ஓங்காரம். அந்த ஓங்காரம் அ உ ம் என்ற மூன்று எழுத்துக்களால் ஆனது.
ஓங்கார மந்திரத்தின் முதற் பகுதி அகாரம் விழிப்பு நிலையாகிய வைசுவானரன். இதில் நிறையும் தன்மையும் ஆரம்ப தன்மையும் சமமாக உள்ளன. இதை அறிபவனின் எல்லா ஆசைகளும் நிறைவேறுகிறது. அவன் முதன்மையானவனாகிறான்.
ஓங்கார மந்திரத்தின் இரண்டாம் பகுதி அகாரம் கனவு நிலையாகிய தைஜஸன். உயர்வாலும், இரண்டின் தொடர்பாலும் இரண்டும் சமமாக உள்ளன. இதை அறிபவன் கட்டாயமாக அறிவை வளர்க்கிறான். சுக துக்கத்தில் சமமாக உள்ளான். ஞானி அல்லாத யாரும் அவனது குலத்தில் பிறப்பது இல்லை.
ஓங்கார மந்திரத்தின் மூண்றாம் பகுதி மகாரம் ஆழ்ந்த தூக்கத்தைக் கொன்ட பிராஜ்ஞன். அளவிடும் தன்மையுலும், கிரகக்கிம் தன்மையுலும் சமமாக உள்ளான். இதை அறிபவன் கட்டாயமாக அனைத்தையும் அளப்பவனாகவும் கிரகிப்பவனாகவும் ஆகிறான்.
ஓங்கார மந்திரத்தின் நான்காம் பகுதி, பகுதி என்று சொல்ல முடியாது. செயல்கள் அற்ற, பிரபஞ்ச உணர்வு கடந்த, மங்கலமான, இரண்டற்றது. இந்த ஓங்காரமே ஆன்மா. இவ்வாறு அறிபவன் ஆன்மாவை ஆன்மாவால் அடைகிறான்.
இந்த சாந்தி மந்திரம் | ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம் | shanti mantra from the mandukya upanishad பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Mantras, Stotram, Veda Mantras in Tamil, Vedic Hymns, Upanishads சாந்தி மந்திரம் | ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம் சாந்தி மந்திரம் | ஓம் பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா: பத்ரம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…