Karuppasamy Songs Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கருப்பசாமி துதிப்பாடல் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

காக்கும் தெய்வமே – எங்கள் கருப்ப தெய்வமே கருப்பசாமி : கருப்பசாமி துதிப்பாடல், பக்திப் பாடல், கருப்பசாமி பாடல் வரிகள். Kaakum Deivame engal karuppasami – Karuppasamy Thuthi Devotional songs Tamil Lyrics

============

காக்கும் தெய்வமே – எங்கள் கருப்ப தெய்வமே – நாங்கள்

நோக்கும் இடமெல்லாம் உந்தன் வீரத்தோற்றமே… (காக்கும்)

அள்ளிச் சொருகிய – மலர் அழகுக் கொண்டையும் – வளர்

துள்ளு மீசையும் – உந்தன் எழிலைக் கூட்டுதே; (காக்கும்)

பகையழித்திடும் – சிறந்த பரந்த தோள்களும் – நல்ல

கருத்த மேனியும் – உந்தன் வலிமை காட்டுதே…  (காக்கும்)

காடு வீடெல்லாம் – உந்தன் காவலில் உண்டு – உயர்

படி பதினெட்டும் – உந்தன் பார்வையிலுண்டு…(காக்கும்)

ஜாதி மல்லிகை – உயர்சாந்து ஜவ்வாது மணக்கும்

சாம்பிராணியும் – உந்தன் வரவைக் கூறுதே… (காக்கும்)

சாய வேட்டியும் – உயர் ஜரிகைப் பட்டுமே – உந்தன்

மேனி அழகிலே – தவழ்ந்து மின்னச் ஜொலிக்குதே… (காக்கும்)

வெள்ளைக் குதிரையும் – உயர் வீச்சரிவாளும் – நல்ல

தண்டைகிண்கிணி முழங்க இங்கு வாருமே…. (காக்கும்)

இந்த | kakkum deivame karuppasami ththi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கருப்பசாமி பாடல்கள், Karuppasamy Songs கருப்பசாமி துதிப்பாடல் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment