Kunguma Archanai song lyrics tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
Aadi Pooram Amman Song Tamil | Kunguma Archanai song lyrics tamil
குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்
கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்
சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்
சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்
தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
திவ்ய தரிசனம் கொடுப்பவளாம்
பாலால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள் பலஜன்ம பாவத்தை போக்கு பவளாம் கனியால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள் கண்முன்னே வந்து நிற்பவளாம்
மனதால் எப்போதும் நினைப்பவர்க்கு அம்பாள் மாங்கல்ய பாக்யம் கொடுப்பவளாம் மும்முறை வலம் வந்து தொழுபவர்க்கு அம்பாள் முன்நின்று காத்தருள் புரிபவளாம்
அடிமேல் அடிவைத்து அவளை வலம் வந்தால் அஷ்ட சம்பத்தும் கொடுப்பவளாம் கற்பூர ஜோதியை காண்பவர்க்கு அம்பாள் கைமேல் பலன்களை கொடுப்பவளாம்
தீராத வினைகளை தீர்ப்பவளாம் தேவி திருவடி சரணம் சரணம் அம்மா
பவபய ஹாரிணி அம்பா பவானியே
துக்க நிவாரிணி துர்க்கே ஜெய ஜெய
காலவி நாசினி காளி ஜெய ஜெய சக்தி ஸ்வரூபிணி மாதா ஜெய ஜெய-துர்க்கா
============
குங்கும அர்ச்சனை பாடல் (புதிய)
============
Aadi Pooram Amman Song New | Kunguma Archanai song lyrics tamil
குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்
கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்
சந்தனத்தால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
சந்தனத்தால் அலங்காரம் செய்தவர்க்கு அம்பாள்
சர்வா பீஷ்டங்களும் கொடுப்பவளாம்
தேனால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
திவ்ய தரிசனம் கொடுப்பவளாம்
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
பாலால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
பலஜன்ம பாவத்தை போக்கு பவளாம்
கனியால் அபிஷேகம் செய்தவர்க்கு அம்பாள்
கண்முன்னே வந்து நிற்பவளாம்
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
தீராத வினைகளை தீர்ப்பவளாம் தேவி
திருவடி சரணம் சரணம் அம்மா
பவபய ஹாரிணி அம்பா பவானியே
துக்க நிவாரிணி துர்க்கே ஜெய ஜெய
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
காலபி நாகினி காளி ஜெய ஜெய
சக்தி ஸ்வரூபிணி மாதா ஜெய ஜெய
கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணவதி சரணம் சரணம்
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
தலைவ நின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள்
கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
ஓம் சக்தி ஓம் . . . ஓம் சக்தி ஓம் . . .
============
அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை
============
குங்கும அர்ச்சனை செய்தவர்க்கு அம்பாள் கோடிக் கோடிப் பொன்னைக் கொடுப்பவளாம்
பொதுவாக ஆடி வெள்ளி என்பது அம்பாளுக்கு வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தினமாக கருதப்பட்டு வருகிறது. இந்நாளில் அம்பாள் கோவில்களில் விசேஷமான பூஜைகளும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். அதே போல நாம் நம்முடைய வீட்டிலும் திருமாங்கல்யத்திற்கு வைக்கும் இந்த 1 பொருளை கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து அவரின் திருநாமாவளிகளை உச்சரித்து வழிபட்டு வந்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் பல. அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்வதை தரிசனம் செய்பவர்களுக்கு கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இருப்பவர்கள் இந்நாட்களில் அம்பாள் கோவிலுக்கு சென்று குங்கும அர்ச்சனையில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டிலேயே உங்கள் கைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். அர்ச்சனை செய்து வந்த அந்த குங்குமத்தை தினமும் உங்களுடைய திருமாங்கல்யத்தில் மற்றும் நெற்றியிலும் இட்டுக் கொண்டால் கணவனுடைய ஆயுள் நீளும்.
இந்த | kunguma archchanai seidhavarkku song lyrics பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Aadi Pooram Amman Songs குங்கும அர்ச்சனை பாடல் வரிகள் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…