Thaye Yasodha Unthan Ayar Kulathuthitha mayan Gopala Krishnan இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Thaye Yasodha Unthan Ayar Kulathu udhitha mayan Gopala Krishnan Seyyum Jaalathai Keladi Song Lyrics by Othukadu Venkata subbaiyer.

============

தாயே யசோதா (alt:யசோதே) உந்தன் ஆயர் குலத்துதித்த

மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி

தையலை கேளடி உந்தன் பையனை போலவே இந்த

வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை

காலினில் சிலம்பு கொஞ்சக்-கைவளை குலுங்க – முத்து

மாலைகள் அசைய தெரு வாசலில் வந்தான்

வானோர்களெல்லாம் மகிழ மானிடரெல்லாம் புகழ

(alternate :காலசைவும் கையசைவும் தாளமோடிசைந்து (=தாளமோடு இசைந்து) வர)

நீல வண்ணக் (alt: மேக) கண்ணன் இவன் நர்த்தனம் (alt: நர்த்தம்) ஆடினான்

பாலன் என்று தாவி (alt: வாரி ) அணைத்தேன் -அணைத்த என்னை

மாலை இட்டவன் போல் வாயில் முத்தம் இட்டாண்டி

பாலன் அல்லடி உன் மகன் ஜாலம் மிக (alt: ஜாலமாக) செய்வதெல்லாம்

நாலு பேர்கள் கேட்கச் சொல்ல (alt: சொன்னால்) நாணம் மிக ஆகுதடி

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து

விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் -ஒரு

பந்தளவாகிலும் வெண்ணை தந்தால் (alt: +தான்) விடுவேன் என்று

முந்துகிலைத் தொட்டிழுத்து (alt: பற்றிழுத்து) போராடினான்

அந்த வாசுதேவன் இவன்தான் -அடி யசோதா /யசோதே (alt: அந்த வாசுதேவனை நானும்)

மைந்தன் என்று எடுத்தணைத்து (alt: தொட்டிழித்து) மடிமேல் (alt :மடியில்) வைத்து

சுந்தர முகத்தைப் பார்க்கும் வேளையிலே வாய் திறந்து (alt: சுந்தர முகத்தை கண்டு சிந்தை மயங்கும் நேரம் )

இந்திரஜாலம் போலவே (alt:போலே/போல்)_இரெழுலகம் காண்பித்தான் (alt: அந்தரம் வைகுண்டமோடு எல்லாம் காட்டினான்)

இந்த தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் | thaye yasodha unthan ayar kulathu udhitha mayan பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment