Karpoora nayagiye lyrics in tamil

கற்பூர நாயகியே பாடல் வரிகள் (Karpoora nayagiye lyrics in tamil) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடலை பாடியவர் எல். ஆர். ஈஸ்வரி அவர்கள்

கற்பூர நாயகியே கனகவல்லி
கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாய கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வ யானையம்மா

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாய கருமாரியம்மா
••••••••••••
நெற்றியினுன் குங்குமமே நிறைய வேண்டும்
அம்மா
நெஞ்சினிலுன் திருநாமம் வழிய வேண்டும்
நெற்றியினுன் குங்குமமே நிறைய வேண்டும்
அம்மா
நெஞ்சினிலுன் திருநாமம் வழிய வேண்டும்

கற்றதெல்லாம் மேன்மேலும் பெருக வேண்டும்
பாடும் கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்

அம்மா

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாய கருமாரியம்மா
••••••••••••
காற்றாகி கனலாகி கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்

காற்றாகி கனலாகி கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
போற்றாத நாளில்லை தாயே உன்னை

போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய்
எம்மை
பொருளோடு புகழோடு வைப்பாய்
எம்மை

கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாய கருமாரியம்மா
கருமாரியம்மா

கருமாரியம்மா

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா – அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா –

உன்
கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா
அருள் மாரியம்மா –

அம்மா

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா –

கரகம் எடுத்து ஆடி வந்தோம்
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்
கரகம் எடுத்து ஆடி வந்தோம்
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்

கரங்கள் குவித்து பாடி வந்தோம்
வரங்கள் குறித்து தேடி வந்தோம் –

அம்மா

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா –
••••••••••••
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்

முத்துமாரி உனை பணிந்தோம்
பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம்
– அம்மா

கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா –
•••••••••••
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் –
••••••
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் –

அம்மா
எங்களுக் கருள் வந்தாய்

அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய் –

அம்மா
எங்களுக் கருள் வந்தாய்

புன்னகை முகம் கொண்டவளே
பொன்மலர் பாதம் தந்தவளே –

அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா –

Leave a Comment