Vaazhvu aanaval lyrics in Tamil

வாழ்வு ஆனவள் துர்கா பாடல் வரிகள் (vaazhvu aanaval)
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடலை ராகு கால துர்கா ஸ்தோத்திரம் என்றும் கூறுவார்கள்… ராகு கால வேளையில் அன்னை துர்கையை வழிபடும் போது இந்த பாடலை பாடுவது மிக சிறப்பாகும்…

இராகம்: மலயமாருதம்

பாடியவர்: பி. சுசீலா

வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்

வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்

வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்

தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்

தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!

••••••••••••
உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்

உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்

உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்

நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்

நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
••••••••••••
செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்

அம்மையானவள் அன்பு தந்தையானவள்

செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்

அம்மையானவள் அன்பு தந்தையானவள்

இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்

மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
••••••••••••
உயிருமானவள் துர்கா உடலுமானவள்

உலகமானவள் எந்தன் உடமையானவள்

உயிருமானவள் துர்கா
உடலுமானவள்

உலகமானவள் எந்தன் உடமையானவள்

பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்

பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
••••••••••••
துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்

துறையுமானவள் இன்ப தோணியானவள்

துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்

துறையுமானவள் இன்ப தோணியானவள்

அன்பு உற்றவள் துர்கா அபயவீடவள்

நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
•••••••••••••
குருவுமானவள் துர்கா குழந்தையானவள்

குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே

குருவுமானவள் துர்கா குழந்தையானவள்

குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே

திருவுமானவள் துர்கா
திரிசூலி மாயவள்

திருவுமானவள் துர்கா
திரிசூலி மாயவள்

திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
•••••••••••
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்

ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்

ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்

ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்

ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்

ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
••••••••••••
கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே

கருணை துர்கையே வீர சகன துர்கையே

கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே

கருணை துர்கையே வீர சகன
துர்கையே

அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே

அன்பு துர்கையே ஜெய துர்கை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
••••••••••••••
*அம்பிகையின் திருவடிகளில் சரணம் !*

Leave a Comment