Monday, December 8, 2025
HomeAmman SongsEswariye Mahamayi Mariamma Song Lyrics

Eswariye Mahamayi Mariamma Song Lyrics

Eswariye Mahamayi Mariamma Song Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க எண்ணி வந்த வரம் கொடுக்க – வாரும் அம்மா, L.R ஈஸ்வரி பாடிய அம்மன் பக்தி பாடல் வரிகள். Eswariye Mahamayi Mariamma by Singer: L. R. Eswari . Mariamman Devotional Song Lyrics Tamil.

============

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா – நாங்க

எண்ணி வந்த வரம் கொடுக்க – வாரும் அம்மா

ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா – இங்கு

உன்னை அன்றி வேறு கதி – ஏதம்மா

(ஈஸ்வரியே மகமாயி)

சமயபுரம் சன்னதியின் வாசலிலே – லோக

சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே

கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய் – நாங்க

கொண்டாட வந்ததற்குப் பலன் கொடுப்பாய்

(ஈஸ்வரியே மகமாயி)

வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய் – சிங்க

வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்

ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் – இந்த

உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்

(ஈஸ்வரியே மகமாயி)

படவேட்டு எல்லையிலே குடி இருப்பாய் – நல்ல

பத்தினிகள் மஞ்சளுக்குத் துணை இருப்பாய்

மங்களங்கள் பெருக வேணும் சக்தியிலே – அதை

குங்கமமாய் தரவேணும் நெத்தியிலே

(ஈஸ்வரியே மகமாயி)

இந்த | பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments