Bakiyam than Lakshmi Varumama Lyrics Tamil | Bakiyam Lakshmi Varumama Tamil Lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா லட்சுமி தேவி பாடல் வரிகள். Bakyamthan Lakshmi Varumama Lakshmi Song Tamil Lyrics from the Album Sri Mahalakshmiye Varuga

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

முன்னோர்கள் செய்த பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

நித்தில கொலுசுகள் கட்டியம் படிக்க

உத்தமி வருகையை மெட்டிகள் ஒலிக்க

நித்ய சுமங்கலி பூஜையில் அழைக்க

மத்துறு தயிரினை வெண்ணையாய் ஜொலிக்க

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

கனக வ்ருக்ஷமாய் தனமழை தருக

மணைகள் எங்கிலும் திரவியம் பெறுக

தினகரன் கோடி உன் மேனியில் உருக

ஜனகராஜன் திரு கண்மணி வருக

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா

சங்கநிதி முதல் நவநிதி தாராய்

கங்கண கையால் மங்களம் செய்தாய்

குங்கும பூவாய் பங்கயப் பாவை

வேங்கடரமனின் பூங்கொடி வாராய்

பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

அத்திகள் சொரியும் மனையில் ஐஸ்வர்யம்

நித்தம் மஹோத்சவம் நித்திய மங்களம்

சக்திக் ஏத்தபடி சாது போஜனம் சாப்பிட்டு தருவாய்

அக்க்ஷதை சீதனம் பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

என் அன்னையே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

சர்க்கரை பாயசம் சுமங்கலி அருந்த

சுக்கிர வார பூஜையில் இருந்து

அக்கறையோடு சந்தனம் குழைத்து சாற்றிட புரந்தர

விட்டலனை அழைத்து பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

என் இல்லமே சௌபாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா..

============================================

அலைமகள் திருவடிகளில் சரணம் !

இந்த | bakiyam than lakshmi varumama lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள், Nithyasree Mahadevan Songs பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment