Suzhi pottu seyal ethuvum thodangu இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு பிள்ளையார் சுழி போட்டு, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய கண‌பதி பாடல் வரிகள். Suzhi pottu seyal ethuvum thodangu pillaiyar suzhi pottu – Sree Ganesha song Lyrics. Singer Seerkazhi Kovindarajan.

ஓரானைக் கன்றை உமயாள் திருமகனை
போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும் வித்தை வரும்
புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்

============

சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

வழியின்றி வேலனவன் திகைத்தான்
குறவள்ளியவள் கை பிடிக்க துடித்தான்

வழியின்றி வேலனவன் திகைத்தான்
குறவள்ளியவள் கை பிடிக்க துடித்தான்

மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்

மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்

அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்

அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்

அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

Leave a Comment