Kondai mudi alangarithu song lyrics இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாய் அம்மா! தேவி பாடல் வரிகள். பாடல் : வீரமணி ஐயர் , குரல்: TM சௌந்தரராஜன். Karpagavalli Nin Porpadhangal by T.M. Soundararajan / Devi Songs Tamil Lyrics

============

கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்

நற்கதி அருள்வாய் அம்மா!(கற்பக வல்லி)

பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்

சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட

(கற்பக வல்லி)

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்

நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ

ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள

ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!

(கற்பக வல்லி)

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்

நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய

கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த

உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!

(கற்பக வல்லி)

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்

வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்

பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த

லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!

(கற்பக வல்லி)

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்

கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் – அருள்

தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்

ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!

(கற்பக வல்லி)

இந்த | karpagavalli nin porpadhangal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Ambal Songs, அம்பாள் பாடல்கள், Navarathri Special Tamil Songs Lyrics கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment