விடைத்தவர் புரங்கள் பாடல் வரிகள் (vitaittavar purankal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமறைக்காடு (வெள்ளிப்பாட்டு) தலம் பிறசேர்க்கை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 8
நாடு : பிறசேர்க்கை
தலம் : திருமறைக்காடு (வெள்ளிப்பாட்டு)
சுவாமி : மறைக்காட்டு மணாளர்
அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்

விடைத்தவர் புரங்கள்

விடைத்தவர் புரங்கள் மூன்றும்
விரிசிலை முனியவாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற
பரமனே பரமயோகீ
கடைத்தலை புகுந்து நின்றோம்
கலிமறைக் காடமர்ந்தீர்
அடைத்திடுங் கதவு தன்னை
யப்படித் தாளினாலே. 1

முடைத்தலைப் பலிகொள் வானே
முக்கணா நக்கமூர்த்தி
மடைத்தலைக் கமலம் ஓங்கும்
வயல்மறைக் காடமர்ந்தாய்
அடைத்திடுங் கதவை என்றிங்
கடியனேன் சொல்லவல்லே
அடைத்தனை தேவி தன்னோ
டெம்மையாள் உகக்குமாறே. 2

கொங்கண மலர்கள் மேவுங்
குளிர்பொழில் இமயப்பாவை
பங்கணா வுருவினாலே பருமணி
யுமிழும் வெம்மைச்
செங்கணார் அரவம் பூண்ட
திகழ்மறைக் காடமர்ந்தாய்
அங்கணா இதுவன் றோதான்
எம்மையாள் உகக்குமாறே. 3

இருளிடை மிடற்றினானே எழில்
மறைப் பொருட்கள்எல்லாந்
தெருள்பட முனிவர்க் கீந்ததிகழ்
மறைக் காடமர்ந்தாய்
மருளுடை மனத்த னேனும்
வந்தடி பணிந்துநின்றேர்க்
கருளது புரிவ தன்றோ
எம்மையாள் உகக்குமாறே. 4

பெருத்தகை வேழந் தன்னைப்
பிளிறிட உரிசெய்தானே
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த
மாமறைக் காடமர்ந்தாய்
கருத்தில னேனும் நின்றன்
கழலடி பணிந்துநின்றேன்
அருத்தியை அறிவ தன்றோ
எம்மையாள் உகக்குமாறே. 5

செப்பமர் கொங்கை மாதர்
செறிவளை கொள்ளுந்தேசோ
டொப்பமர் பலிகொள் வானே
ஒளிமறைக் காடமர்ந்தாய்
அப்பமர் சடையி னானே
அடியனேன் பணியுகந்த
அப்பனே அளவிற் சோதீ
அடிமையை உகக்குமாறே. 6

மதிதுன்றும் இதழி மத்தம்
மன்னிய சென்னியானே
கதியொன்றும் ஏற்றி னானே
கலிமறைக் காடமர்ந்தாய்
விதியொன்று பாவின் மாலை
கேட்டருள் வியக்குந்தன்மை
இதுவன்றோ உலகின் நம்பி
எம்மையாள் உகக்குமாறே. 7

நீசனாம் அரக்கன் றிண்டோள்
நெரிதர விரலால்ஊன்றுந்
தேசனே ஞான மூர்த்தீ
திருமறைக் காடமர்ந்தாய்
ஆசையை யறுக்க உய்ந்திட்
டவனடி பரவமெய்யே
ஈசனார்க் காள தானான்
என்பதை அறிவித்தாயே. 8

மைதிகழ் உருவினானும் மலரவன்
றானும் மெய்ம்மை
எய்துமா றறிய மாட்டார்
எழில்மறைக் காடமர்ந்தாய்
பொய்தனை யின்றி நின்னைப்
போற்றினார்க் கருளைச்சேரச்
செய்தனை யெனக்கு நீயின்
றருளிய திறத்தினாலே. 9

மண்டலத் தமணர் பொய்யுந்
தேரர்கள் மொழியும்மாறக்
கண்டனை யகள என்றும்
கலிமறைக் காடமர்ந்தாய்
தண்டியைத் தானா வைத்தான்
என்னுமத் தன்மையாலே
எண்டிசைக் கறிய வைத்தாய்
இக்கத வடைப்பித்தன்றே. 10

மதமுடைக் களிறு செற்ற
மாமறைக் காட்டுளானைக்
கதவடைத் திறமுஞ் செப்பிக்
கடிபொழிற் காழிவேந்தன்
தகவுடைப் புகழின் மிக்கதமிழ்
கெழுவிரகன் சொன்ன
பதமுடைப் பத்தும் வல்லார்
பரமனுக் கடியர்தாமே.

குறிப்பு : பின்னர் கிடைக்கப்பெற்ற திருஞானசம்பந்த

திருச்சிற்றம்பலம்

Leave a Comment