Shiva Manasa Puja Stotram In Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சிவ மானஸ பூஜா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
Shiva Manasa Puja Tamil Lyrics | சிவ மானஸ பூஜா ஸ்தோத்ரம் வரிகள்
இத்துதியின் தொடக்கத்தில் அடியிற்காணும் சுலோகமும் கூறப்படுவதுண்டு:
ஆராதயாமி மணிஸந்நிபம் ஆத்மலிங்கம்
மாயாபுரீ ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்
ஸ்ரத்தாநதீ – விமலசித்த ஜலாபிஷேகை:
நித்யம் ஸமாதி குஸுமை: அபுநர்பவாய
மாயையான உடலுள் இதயத் தாமரையில் நன்கு குடி கொண்ட மணியை நிகர்த்த, ஆத்மாவாம் லிங்கத்தை (ஜீவனுள் அங்குஷ்ட ப்ரமாணமாக ஒளிரும் பரமாத்மாவை), சிரத்தை என்ற நதியிலிருந்து, தூய சித்தத்தால் கொணர்ந்த நீரைக் கொண்டு தினமும் முழுக்காட்டி, ஸமாதி நிலை என்கிற பூவால் அர்ச்சித்து வழிபடுகிறேன். மறுபடி பிறப்பெடுக்காமலிருப்பதற்காக (இவ்வழிபாட்டைச் செய்கிறேன்).
============
சிவ மானஸ பூஜா ஸ்தோத்ரம் துவக்கம்
ரத்னை: கல்பிதம் – ஆஸனம் ஹிமஜலை: ஸ்நானம் ச திவ்யாம்பரம்
நானாரத்ந: விபூஷிதம் ம்ருகமதா மோதாங்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்-கல்பிதம் க்ருஹ்யதாம் ||1
தயாநிதியான பசுபதியே! (உன்னை அமர்த்த) ரத்னமயமாக ஏற்படுத்திய ஆசனம்; (உனக்கு) பனிநீரில் திருமுழுக்கு; திவ்யமான வஸ்திரம்; பற்பல மணிகள் இழைத்த அணிகள்; கஸ்தூரியால் மணமூட்டப்பட்ட சந்தனம் (கந்த உபசாரம்); ஜாதி மல்லிகை, சம்பகம், வில்வ தளம், இணையற்ற (வேறு பல) பூக்கள் (ஆகியவற்றால் புஷ்ப உபசாரமான அர்ச்சனை); இவ்வாறே தூபம் காட்டும் உபசாரம்; தீபாராதனை உபசாரம் ஆகியனவுமாக – என் ஹ்ருதயத்தில் (மானஸீகமாக) ) செய்யப்படுவதை ஏற்றுக்கொள்வாயாக!
ஸெளவர்ணே நவரத்ன கண்டரசிதே பாத்ரே க்ருதம் பாயஸம்
பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பா பலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கற்பூர கண்ட உஜ்ஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு ||2
(இனி நைவேத்ய உபசாரமாக) நவரத்னங்களை ஏராளமாக இழைத்த பொற் பாத்திரங்களில் (வைக்கப்பட்ட). ஐந்து விதமான பக்ஷ்யங்களுடனும், பால் நெய் இவற்றுடனும் கூடியதான அதியற்புதமான அன்னம், வாழைப்பழம், பாயஸம், கணக்கற்ற காய்கறிகள், ஜீரணகாரியான தீர்த்தம், பச்சைக் கர்ப்பூரம், மிளிரும் தாம்பூலம் – ஆகிய, என்னால் மான ஸீகமாக பக்தியுடன் கல்பிக்கபட்டவற்றை ஏற்றுக்கொள்வாய், ப்ரபுவே !
சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஸகம் நிர்மலம்
வீணா பேரி ம்ருதங்க கோஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதி: ஸ்துதி: பஹுவிதா ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸங்கல்பேன ஸமர்ப்பிதம் தவ விபோ பூஜாம் க்ருஹாண ப்ரபோ ||3
விச்வ வியாபகனான விபுவே, விச்வத்தை ஆளும் ப்ரபுவே! குடைபிடித்தலாகிய சத்ர உபசாரம், இரட்டை சாமரம், விசிறி (முதலியவற்றாலான உபசாரங்கள்), அழுக்கில்லாத கண்ணாடி (கையை பகவானுக்குக் காட்டும் உபசாரம்), வீணை – புல்லாங்குழல் – மிருதங்கம் – முரசு முதலியவற்றின் கீதம் (இசை உபசாரம்), இவ்விதமே நடன (உபசாரமும்; (இவற்றின் பின் நான் செய்யும்) ஸாஷ்டாங்க நமஸ்காரம், உன்னைக் குறித்த பலவிதமான துதிகளை ஓதல் – என்றிப்படி ஸங்கல்பத்தால் நான் அனைத்து அங்கங்களோடும் உனக்குப் புரியும் பூஜையை ஏற்றருள்க!
ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: ஸரீரம் க்ருஹம்
பூஜா தே விஷயோபபோக ரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி:
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா-கிரோ
யத்-யத் கர்ம கரோமி தத்-தத் அகிலம் ஸம்போ தவ ஆராதனம் ||4
[என்னுடைய, அதாவது அனைத்து ஜீவராசிகளுடைய] ஆத்மா (பரப்ப்ரம்மமான பரமசிவமாம்) நீயே; (என்னுடைய) அறிவென்பது (உமது சக்தியாம் பராசக்தியான) மலைமகளே; (என்னுடைய) ஐந்து ப்ராணன்களே (உன்) பரிவாரம்; என்னுடைய சரீரமே (உனது) கோயில்; நான் இந்திரியங்களால் அநுபவிக்கும் எல்லாமே உன் வழிபாடு (வழிபாட்டின் அங்கமான பல – உபசாரங்கள்); நான் உறங்குவது (உன்னில் ஒருமித்த) ஸமாதி நிலை; காலால் (நான் செய்யும் ஸஞ்சாரம் யாவும் (உனக்குச் செய்யும்) பிரதக்ஷிண முறை; (பேசுகிற) எல்லா வார்த்தைகளும் (உன்னைப் போற்றும்) துதிகள். சம்புவே! நான் எந்தக் காரியம் செய்கிறோனோ, அது முழுதும் உனக்கான பூஜை (யாகட்டும்).
கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண – நயனஜம் வா மானஸம் வாபராதம்
விஹிதம் – அவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ ||5
மஹாதேவனான ஸ்ரீ சம்புவே! கைகால்களினால் (நான்) செய்த பிழை; வாக்காலோ, சரீரத்தாலோ அல்லது மனத்தாலோ (நான்) புரிந்த அபராதம்; சிலவற்றைச் செய்ததால் ஏற்பட்ட அபராதம்; அவ்வாறே சிலவற்றைச் செய்யாமலிருந்ததால் உண்டான அபராதம் – இவை அனைத்தையும் மன்னித்தருள்வாயாக! கருணைக்கடலே, போற்றி, போற்றி!
**** ஸ்ரீ ஸிவ மானஸ பூஜா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம். ****
============
மானஸ பூஜா என்றால் என்ன?
பூஜா என்றால் தெய்வத்தின் மீதான பக்தியில், பிரேமையில் மனம் மலர்தல் என்பது பொருள். முறையான பூஜைக்கான இடம், காலம், சாதனங்கள், பொருட்கள் எதுவும் இல்லாதபோதும், மனதாலேயே பூஜை செய்வது மானஸ பூஜை எனப்படும். கவனம் சிதறாத உளக்குவிப்புடனும் தியான நிஷ்டையுடனும் செய்யப் படுமானால், புறத்தே செய்யப் படும் பூஜையை விடவும் மானஸ பூஜை உத்தமமானது என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.
நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம் – அன்பே
மஞ்சனநீர்; பூசைகொள்ள வாராய் பராபரமே
என்கிறார் தாயுமானவர்.
இத்தகைய பூஜா-தியான மனப்பாங்குக்கு உதவும் வகையில் தெய்வங்களைக் குறித்து மானஸ பூஜா ஸ்தோத்திரங்களை ஆசாரியர்களும் மகான்களும் அருளியுள்ளார்கள். தனது இஷ்ட தெய்வத்தைக் குறித்த மானஸ பூஜா ஸ்தோத்திரத்தை பொருளறிந்து தொடர்ந்து பாராயணம் செய்து வருபவர்களுக்கு, காலப்போக்கில் இயல்பாகவே மானஸ பூஜைக்கு உகந்ததான தியான மனநிலை கைகூடி வரும் என்பது பெரியோர்களின் உபதேசம்.
இந்த சிவ மானஸ பூஜா | shiva manasa puja stotram tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Sloka, சிவன் பாடல்கள், Stotram சிவ மானஸ பூஜா சிவ மானஸ பூஜா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…