பொன்னார் திருவடிக் பாடல் வரிகள் (ponnar tiruvatik) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருத்தூங்கானைமாடம் – பெண்ணாடம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : நடுநாடு
தலம் : திருத்தூங்கானைமாடம் – பெண்ணாடம்
சுவாமி : சுடர்க்கொழுந்தீசர்
அம்பாள் : அழகிய காதலியம்மை

பொன்னார் திருவடிக்

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்
மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க்கொழுந்தே. 1

ஆவா சிறுதொண்ட னென்நினைந்
தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன்
மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப்
பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை
மாடத்தெம் புண்ணியனே. 2

இப்பதிகத்தில் 3-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 3

இப்பதிகத்தில் 4-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 4

இப்பதிகத்தில் 5-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 9

கடவுந் திகிரி கடவா
தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத்
தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள்
ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை
மாடத்தெந் தத்துவனே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment