படையும் பூதமும் பாடல் வரிகள் (pataiyum putamum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாஞ்சியம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாஞ்சியம்
சுவாமி : வாஞ்சிநாதர்
அம்பாள் : வாழவந்தநாயகி

படையும் பூதமும்

படையும் பூதமும்
பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய
உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய
பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க்
கல்லலொன் றில்லையே. 1

பறப்பை யும்பசு
வும்படுத் துப்பல
திறத்த வும்முடை
யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக்
கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு
வாஞ்சியஞ் சேர்மினே. 2

புற்றி லாடர
வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத்
தேவர் பிரான்பதி
சுற்று மாடங்கள்
சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க்
குப்பாவ மில்லையே. 3

அங்க மாறும்
அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர்
தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட
மார்திரு வாஞ்சியந்
தங்கு வார்நம்
மமரர்க் கமரரே. 4

நீறு பூசி
நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும்
அடிகள் உறைபதி
மாறு தானொருங்
கும்வயல் வாஞ்சியந்
தேறி வாழ்பவர்க்
குச்செல்வ மாகுமே. 5

அற்றுப் பற்றின்றி
யாரையு மில்லவர்க்
குற்ற நற்றுணை
யாவான் உறைபதி
தெற்று மாடங்கள்
சூழ்திரு வாஞ்சியங்
கற்றுச் சேர்பவர்க்
குக்கருத் தாவதே. 6

அருக்கன் அங்கி
யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி
யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக
முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை
வார்க்கில்லை யல்லலே. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment