Om Namo Namashivaya Om Namo Namashivaya இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ பாடல் வரிகள் – Om Namo Namashivaya Om Namo Namashivaya Tamil Lyrics

============

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே

காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ

மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே

முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ

செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே

சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ

செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே

விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ

தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே

தேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோ

மண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனே

தேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ

அன்பினில் களிப்பவனே ஆனந்தம் அளிப்பவனே

இன்பங்கள் கொடுப்பவனே ஓம்நமோ நமோ

நெஞ்சினில் இருப்பவனே நேசத்தில் மணப்பவனே

துன்பங்கள் அழிப்பவனே ஓம்நமோ நமோ

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ

இந்த ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய | om namo namashivaya om namo namashivaya பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, சிவன் பாடல் வரிகள் ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment