Nirvana Shatakam Lyrics in Tamil | Nirvana Shatakam Meaning in Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் நிர்வாண ஷடகம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

நிர்வாண ஷடகம் – பாடல் வரிகள் | Nirvana Shatakam Lyrics in Tamil | Nirvana Shatakam or Atma Shatakam

மனோ புத்தி அஹங்கார சித்தானி நாஹம்

ந ச ஷ்ரோத்ரஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே

ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயுஹு

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

ந ச ப்ராண சங்யோ ந வை பஞ்ச வாயுஹு

ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோஷ:

ந வாக் பாணி-பாதம் ந சோபஸ்த்த பாயு:

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ

ந மே வை மதோ நைவ மாத் சர்ய பாவஹ

ந தர்மோ ந ச்சார்தோ ந காமோ ந மோக்ஷஹ

சிதாநந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்

ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞஹ

அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

ந மே ம்ருத்யு ஷங்கா ந மேஜாதி பேதஹ

பிதா நைவ மே நைவ மாதா ந ஜன்மஹ

ந பன்துர் ந மித்ரம் குரூர் நைவ சிஷ்யஹ

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

அஹம் நிர்விகல்போ நிராகாரோ ரூபோ

விபுத் வாட்ச்ச ஸர்வத்ர ஸர்வேந்த்ரியானாம்

ந ச்ச சங்கதம் நைவ முக்திர் ந மேயஹ

சிதானந்த ரூபஹ் ஷிவோஹம் ஷிவோஹம்

============

நிர்வாணஷட்கம் பொருள் (Nirvana Shatakam Meaning in Tamil)

============

நிர்வாண ஷடகம் பொருள்

============

Nirvana Shatakam Meaning in Tamil | Nirvana Shatakam or Atma Shatakam Slokas and Meaning in Tamil

ஆதிசங்கர பகவத்பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் (விடுதலை ஆறு) பொருள் மற்றும் விளக்கம்.

மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே

ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:

சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

மனோ புத்தி அஹங்கார சித்தா நின அஹம் – நான் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் எதுவுமில்லை.

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே – நான் காதுகளும் இல்லை; நாவும் இல்லை

ந ச க்ராண நேர்த்ரே – நான் நாக்கும் இல்லை; கண்களும் இல்லை

ந ச வ்யோம பூமி: – நான் வானமும் இல்லை; பூமியும் இல்லை

ந தேஜோ ந வாயு: – நான் ஒளியும் இல்லை; காற்றும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் – அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:

ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:

ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:

சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

ந ச ப்ராண சங்க்யோ ந வை பஞ்ச வாயு: – நான் மூச்சால் கட்டுப்பட்டவன் இல்லை; நான் ஐந்துவிதமான காற்றுகளும் இல்லை (ப்ராணன் – உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் – உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் – உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் – உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் – உடல் செய்கைகளை நடத்தும் காற்று)

ந வா சப்த தாதுர் ந வா பஞ்ச கோச: – நான் ஏழுவிதமான உடற்பொருட்களும் இல்லை (ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை); நான் ஐந்துவிதமான போர்வைகளும் இல்லை (அன்னமய கோசம் – உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் – உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் – மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் – அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் – இன்பத்தால் ஆன போர்வை)

ந வா பாணி பாதம் ந ச உபஸ்த பாயு: – நான் கைகால்களும் இல்லை; நான் மற்ற உறுப்புகளும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் – அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ

மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:

ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:

சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

ந மே த்வேஷ ராகௌ – எனக்கு வெறுப்பும் விருப்பும் இல்லை

ந மே லோப மோஹௌ – எனக்கு பற்றுதலும் மயங்குதலும் இல்லை

மதோ ந ஏவ மே ந ஏவ மாத்ஸர்ய பாவ: – எனக்கு கருவமும் இல்லை; பொறாமையும் இல்லை

ந தர்ம: – நான் அறமும் இல்லை

ந ச அர்த்த: – நான் பொருளும் இல்லை

ந காம: – நான் இன்பமும் இல்லை

ந மோக்ஷ: – நான் வீட்டுப்பேறும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் – அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்

ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:

அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா

சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

ந புண்யம் ந பாபம் – நான் புண்ணியமும் இல்லை பாவமும் இல்லை

ந சௌக்யம் ந துக்கம் – நான் இன்பமும் இல்லை துன்பமும் இல்லை

ந மந்த்ரோ ந தீர்த்தம் – நான் மந்திரமும் இல்லை புண்ணிய தீர்த்தமும் இல்லை

ந வேதா ந யக்ஞ: – நான் வேதமும் இல்லை யாகங்களும் இல்லை

அஹம் போஜனம் ந ஏவ போஜ்யம் ந போக்தா – நான் உணவும் இல்லை உண்ணும் காரியமும் இல்லை உண்டு அனுபவிப்பவனும் இல்லை (நான் புலனுக்குட்படும் பொருட்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிக்கும் செயல்களும் இல்லை; புலன்களின் வழி அனுபவிப்பவனும் இல்லை)

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் – அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:

பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா

ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:

சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

ந ம்ருத்யுர் ந சங்கா – எனக்கு மரணம் இல்லை; எனக்கு பற்றுதல் இல்லை

ந மே சாதி பேத: – எனக்கு சாதி பேதங்கள் இல்லை

பிதா ந ஏவ மே ந ஏவ மாதா ச ஜன்மா – எனக்கு தாய் தந்தையர் இல்லை; எனக்கு பிறப்பும் இல்லை

ந பந்துர் ந மித்ரம் – எனக்கு உறவுகள் இல்லை; நட்புகள் இல்லை

குருர் ந ஏவ சிஷ்யா – நான் குருவும் இல்லை சிஷ்யனும் இல்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் – அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

அஹம் நிர்விகல்போ நிராகாரரூபோ

விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்

ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா

சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

அஹம் நிர்விகல்ப – நான் மாற்றம் இல்லாதவன்

நிராகாரரூப: – உருவம் இல்லாதவன்

விபுத்வா ச – எங்கும் நிறைந்தவன்

சர்வத்ர – எல்லாம் ஆனவன்

சர்வேந்த்ரியானாம் – எல்லா உடல்களிலும் வசிப்பவன்

ந ச சங்கடம் – எனக்கு கட்டுப்பாடுகள் இல்லை

ந ஏவ முக்தி: ந மே யா – அதனால் எப்போதும் எனக்கு விடுதலை என்பதும் தேவையில்லை

சித் ஆனந்த ரூப: சிவோஹம் சிவோஹம் – அறிவும் ஆனந்தமும் வடிவாகக் கொண்ட சிவன் நான்; சிவம் நான்.

============

நிர்வாண ஷடகம் பலன்

============

Nirvana Shatakam Benefits | Nirvana shatkam benefits

மன‌ அமைதி அடைய நீங்கள் உச்சரிக்கக்கூடிய மிகவும் பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த மந்திரங்களில் ஒன்றாக நிர்வாண ஷடகம் நம்பப்படுகிறது. இந்த மந்திரத்தின் அடிப்படைக் கருத்து என்னவென்றால், உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ நான் எதற்கும் கட்டுப்படவில்லை. நான் சிவன். ஒரு நாளைக்கு ஒரு முறை நிர்வாண ஷதகம் பாடுவது மற்றும் கேட்பது உங்களைச் சுற்றி மிகவும் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கி, நனவை உருவாக்கும்.

நீங்கள் கவலை மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிட்டால், நிர்வாண ஷதகத்தின் அனைத்து நன்மைகளிலும் மிக முக்கியமானது அது மன‌ நிம்மதி தந்து நமது மன ஆரோக்கியத்தினை பாதுகாக்க வல்லது.

நிர்வாண ஷதகத்தைப் பாடுவதும் கேட்பதும் உங்களை உணர்ச்சியை கட்டுக்குள் வைக்கிறது. வாழ்க்கையின் அழுத்தமான சூழ்நிலைகளில் கூட நீங்கள் நித்திய அமைதியான நிலையை அடைய முடியும்.

தேவையற்ற பிணைப்புகளிலிருந்து விடுபடத் தொடங்குவீர்கள். இவ்வாறு விட்டுவிடத் தொடங்கினால் பொறாமை கொண்ட சக ஊழியர் கூட‌ உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்.

இந்த நிர்வாண ஷடகம் | nirvana shatakam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள் நிர்வாண ஷடகம் நிர்வாண ஷடகம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment