Maraiyudaiyai Tholudaiyai Vaarsadai Melvalarum இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

திருஞானசம்பந்தர் தேவாரம் – திருநெடுங்களம் – மறையுடையாய் தோலுடையாய் பாடல் வரிகள். Maraiyudaiyai Tholudaiyai Vaarsadai Melvalarum Shiva Pradosham Devotional Song lyrics

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்

குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த

நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்

தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை

மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்

நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத

என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த

பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்

நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்

அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா

தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்

நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

பாங்கினல்லார்1 படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்

தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்

தாங்கிநில்லா2 அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்

நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்

அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்

நிருத்தகீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்

மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்

ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த

நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை

அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்

என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்

நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்

சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்

கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்

நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்

தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்

துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே

நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.

நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்

சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்

நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன

பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

இந்த மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் | maraiyudaiyai tholudaiyai vaarsadai melvalarum பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, Stotram, சிவன் பாடல் வரிகள் மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment