Manikarnika stotram lyrics tamil
மணிகர்ணிகா ஸ்துதி பாடல் வரிகள் (Manikarnika stotram lyrics or manikarnika stuti lyrics in tamil)!
1.த்வத்தீரே மணிகார்ணிகே ஹரிஹரௌ ஸாயுஜ்ய முக்திப்ரதௌ
வாதம் தௌ குருத:பரஸ்பரமுபௌ ஜந்தோ:ப்ரயாணோத்ஸவே!
மத்ரூபோ மனுஜோsயமஸ்து ஹரிணா ப்ரோக்த:சிவஸ்தத்க்ஷணாத்!
தன்மத்யாத் ப்ருகுலாஞ்சனோ கருடக:பீதாம்பரோநிர்கத:!!
2.இந்த்ராத்யாஸ்த்ரிதசா:பதந்தி நியதம் போகக்ஷயே யே புன:
ஜாயந்தே மனுஜாஸ்ததோsபி பவச:கீடா:பதங்காதய:!
யே மாத:மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷா:
ஸாயுஜ்யேsபி கிரீடகௌஸ்து பதரா நாராயணா:ஸ்யுரநரா:!!
3.காசீ தன்யதமா விமுக்திநகரீ ஸாலங்க்ருதா கங்கயா
தத்ரேயம் மணிகர்ணிகா ஸுககரீ முக்திர்ஹி தத்கிங்கரீ!
ஸ்வர்லோக ஸ்துலித:ஸஹைவ விபுதை:காச்யா ஸமம் ப்ரஹ்மணா
காசீ க்ஷே£ணிதலே ஸ்திதா குருதரா ஸ்வர்கோ லகுத்வம் கத:!
4.கங்காதீரமெனுத்தமம் U ஸகலம்;தத்ராபி காச்யுத்தமா
தஸ்யாம் ஸா மணிகர்ணிகோத்தமதமா யத்ரேச்வரோ முக்தித: I
தேவானாமபி துர்லபம் ஸ்தலமிதம் பாபௌக நாசக்ஷமம்
பூர்வோபார்ஜிதபுண்ய புஞ்ஜகமகம் புண்ணயைர்ஜனை:ப்ராப்யதே!!
5.து:காம்போதி கதோ ஜந்து நிவஹஸ்தேஷாம் கதம் நிஷ்க்ருதி:
ஜ்ஞாத்வா தத்ஹி விரிஞ்சிநா விரசிதா வாராணஸீ சர்மதா!
லோகா:ஸ்வர்க முகாஸ்ததோsபி லகவோ போகாந்தபாதப்ரதா:
காசீமுக்தி புரீ ஸதாசிவகரீ தர்மார்த்த மோக்ஷப்ரதா!!
6.ஏகோ வோணுதரோ தராததரதர:ஸ்ரீவத்ஸ பூஷாதார
யோsப்யோக:கில சங்கரோ விஷதரோ கங்காதரோ மாதவ: !
யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி தே மானவா:
ருத்ரா வா ஹரயோ பவந்தி பஹவஸ்தேஷாம் பஹ§த்வம் கதம் !!
7.த்வத்தீரே மரணம்து மங்கல கரம் தேவை ரபி ச்லாக்யதே
சக்ரஸ்தம் மனுஜம் ஸஹஸ்ரநயநை:த்ரஷ்டும் ஸதா தத்பர: !
ஆயாந்தம் ஸவிதா ஸஹஸ்ரகிரணை:ப்ரத்யுத்கதோsபூத் ஸதா
புண்யோsஸெள வ்ருஷகோsதவா கருடக:கிம் மந்திரம் யாஸ்யதி!!
8.மத்யாஹ்னே மணிகர்ணிகாஸ்நபனஜம் புண்யம் வ வக்தும் க்ஷம:
ஸ்வீயை ரப்தசதை:சதுர்முகதரோ வேதார்த்த தீக்ஷ£ குரு: !
யோகாப்யாஸ பலேந சந்த்ர சிகரஸ்தத்புண்யபாரங்கத:
த்வத்தீரே ப்ரகரோதி ஸுப்தபுருஷம் நாராயணம் வா சிவம் !!
9.க்ருச்ரை:கோடிசதை:ஸ்வபாபநிதனம் யாச்சாச்வமதை:பலம்
தத்ஸர்வம் மணிகர்ணிகாஸ்நபனஜே புண்யே ப்ரவிஷ்டம்பவேத்!
ஸ்நாத்வா ஸ்தோத்ரமிதம் நர:படதி சேத் ஸம்ஸாரபாதோநிதிம்
தீர்த்வா பல்வலவத் ப்ரயாதிஸதனம் தேஜோமயம் ப்ரஹ்மண:!!
மணிகர்ணிகா ஸ்துதி பொருள்
1. ஹே மணிகர்ணிகே!உனது கரையில் ஸாயுஜ்ய முக்தி வழங்கும் ஹரியும் ஹானும் ஒருவருக்கொருவர், ஒரு பிராணிமரிக்கும் தருவாயில் வாதம் செய்வார்கள். ஹரி சிவனிடம் கூறினார். இந்த மனிதன் என்னைப் போன்றிருக்கட்டுமே என்று. உடனேயே அந்த மனிதன் சரீரத்திலிருந்து, பிருகு மஹர்ஷியின் அடையாளத்துடனும், கருட வாஹனத்துடனும், பீதாம் பரத்துடனுமாக வெளியேறினான்.
2. தேவராகியிருப்பவர்கூட ஒரு சமயம்-புண்ய பலமாக கோகக் காலம் முடிந்தவுடன் மனிதராகவோ, பசுக்களாகவோ, பறவை பூச்சிகளாகவோ தான் பிறக்கிறார்கள். ஆனால், ஹேதாயே!மணிகர்ணிகே!உனது ஜலத்தில் ஸ்னாநம், செய்தவர்கள் பாபம் நீங்கி ஸாயுஜ்ய நிலையிலும் கிரீடம், கௌஸ்துபம் தாங்கிய நாராயணர்களாக ஆகிவிடுகிறார்களே!
3. புண்ணியமான காசீ க்ஷேத்ரம் மோக்ஷத்தை கொடுக்கவல்லது. அதிலும் கங்கையுடன் சேர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், சாச்வத சுகத்தை (மோக்ஷத்தை) கொடுப்பதான மணிகர்ணிகையும் அங்குள்ளது. ஆகவே, பிரம்மதேவன், காசீ க்ஷேத்திரத்தையும் ஸ்வர்கத்தையும் எடைபோட்டதில், காசீ மிககனம் கொண்டதால் பூமியில் தட்டியது. ஸ்வர்கம் எடை குறைவால் லகுவாகிறது.
4. கங்கைக்கரைப்பிரதேசம் முழுதுமே புண்யமானது. அதிலும் காசீ மிக உத்தமக்ஷேத்ரம், அதிலும், ஈச்வரன் முக்தி வழக்குமிடமான மணிகர்ணிகை மிக மிக உத்தமமானது. பாபத்தைப் போக்கும் இந்த மணிகர்ணிகைஸ்தலம் தேவருக்கும் கிடைத்தற்கரியது. முன்பிறவியில் செய்த புண்யக் குவியலால் ஆன்றோர்க்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.
5. உலகத்தில் பிறந்த உயிரினங்கள் துன்பக்கடலில் விழ, அவர்களுக்கு விடிவுதான் எப்படி?என்றெண்ணி பிரம்மன் மங்கலம் பயக்கும் காசியை தோற்றுவித்துள்ளார். உலக மக்கள் சுவர்கத்தை நாடுகின்றனர். ஆனால் சுகானுபவத்தின் பின் வீழ்ச்சியைத்தான் அவை தருகின்றன. காசியோதர்மம், அர்த்தம், மோக்ஷம் இவற்றை பயக்கும் முக்திபுரியாகும்.
6. புல்லாங்குழல், கோவர்தனமாலை, ஸ்ரீவத்ஸம் என்ற அலங்காரம் இவற்றை தரிப்பவர் ஒரு கிருஷ்ணர்தானே!சங்கரர் என்பவரும் விஷம் உண்டவர், கங்கையை தலையில் கொண்டவர், உமையின் பர்த்தாவாகியவரும் ஒருவர்தான். ஆனால் தாயே மணிகர்னே. இனது பிரவாஹத்தில் பலர் மூழ்கி, பல ருத்ரர்களாகவும், பல விஷ்ணுவாகவும் ஆவதுதான் எப்படியோ!ஆச்சர்யம் இது.
7. ஹேமணிகர்ணிகே!உனது தீரத்தில் மரணமெய்துவது தேவர்களே போற்றும் படி மங்கலகரமானது. இந்திரன் அப்படி மரித்த ஒருவரை ஆயிரம் கண்களாலும் காண விழைகிறான்:சூர்யன் தன் பக்கம் வந்து கொண்டிருக்கிற அவனை எதிர் கொண்டு அழைக்கிறார். ஆகவே, அவர் வ்ருஷபத்தின் மீதோ, கருடன் மீதோ ஏறி ஏதோ ஒரு கோயிலை அடையப் போகிறேன்.
8. மத்யான வேளையில் மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்வதன் பயனாக புண்யம் உண்டைவதை சொல்ல இயலாது. சதுர்முக பிரம்மா அதாவது வேதார்த்தத்தை விளக்கியவர் அல்லது சந்த்ரசேகரர் யோகாப்யாஸபலத்தால் அந்த புண்யத்தின் எல்லைக்கே போய் உனது தீரத்தில் மரித்தவளை நாராயணனாகவோ சிவானகவோ செய்து விடுகிறார்.
9. கோடிக்கணக்கில் செய்த க்ருச்சாசரணம் மூலமாக தத்தம் பாபங்களை போக்கிக் கொள்வதோ அல்லது பல அச்வமேதங்களால் உண்டாகும் பயனையோ மணிகர்ணிகையில் ஒரு முறை ஸ்நானம் செய்து இந்தஸ்லோகத்தை படிப்பவர். ஸம்ஸாரக்கடலை ஒரு குட்டையைக் கடப்பது போல் கடந்து பிரம்மலோகம் எய்துவர்.
மணிகர்ணிகா ஸ்தோத்திரம் பொருள்
ன்னோர்களுடைய படத்தை வைத்து அலங்காரம் செய்து, அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பொருளை நைவேத்யம் படைத்து, தேங்காய், வாழைப்பழம் ஆகியயை படைத்து துளசி இலைகளாலும், மலர்களாலும் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி, எள்ளும், தண்ணீரும் தாம்பாளத்தில் இறைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இந்த நீரை செடிகளுக்கும் அல்லது ஓடும் நீர் நிலைகளிலும் சமர்பிக்க வேண்டும். பின்னர் பிரசாதத்தை காக்கைக்கு உணவிட்டு கயாவில் சிரார்த்தம் செய்ததாக கூறிக் கொள்ள வேண்டும். இப்படி உங்களால் முடிந்ததை செய்து இந்த மணிகர்ணிகா ஸ்துதியை வாசித்தால் போதும்! தேவர்களுக்கும் கிடைக்காத அற்புத வரங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை