மாணிக் குயிர்பெறக் பாடல் வரிகள் (manik kuyirperak) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமாற்பேறு – திருமால்பூர் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : தொண்டைநாடு
தலம் : திருமாற்பேறு – திருமால்பூர்
சுவாமி : மணிகண்டேஸ்வரர்
அம்பாள் : கருணாம்பிகை
மாணிக் குயிர்பெறக்
முதல் செய்யுள் சிதைந்துபோயிற்று 1
இரண்டாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 2
மாணிக் குயிர்பெறக் கூற்றை
யுதைத்தன மாவலிபால்
காணிக் கிரந்தவன் காண்டற்
கரியன கண்டதொண்டர்
பேணிக் கிடந்து பரவப்
படுவன பேர்த்துமஃதே
மாணிக்க மாவன மாற்பே
றுடையான் மலரடியே. 3
கருடத் தனிப்பாகன் காண்டற்
கரியன காதல்செய்யிற்
குருடர்க்கு முன்னே குடிகொண்
டிருப்பன கோலமல்கு
செருடக் கடிமலர்ச் செல்விதன்
செங்கம லக்கரத்தால்
வருடச் சிவப்பன மாற்பே
றுடையான் மலரடியே. 4
ஐந்தாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 5
ஆறாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 6
ஏழாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 7
எட்டாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 8
ஒன்பதாம் செய்யுள் சிதைந்துபோயிற்று 9
பத்தாம் செய்யுள் சிதைந்துபோயிற்று
திருச்சிற்றம்பலம்