Thursday, November 13, 2025
HomeSivan Songsமழையார் மிடறா பாடல் வரிகள் | malaiyar mitara Thevaram song lyrics in tamil

மழையார் மிடறா பாடல் வரிகள் | malaiyar mitara Thevaram song lyrics in tamil

மழையார் மிடறா பாடல் வரிகள் (malaiyar mitara) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவானைக்கா – திருவானைக்கோவில் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவானைக்கா – திருவானைக்கோவில்
சுவாமி : நீர்த்திரள்நாதர்
அம்பாள் : அகிலாண்ட நாயகி

மழையார் மிடறா

மழையார் மிடறா
மழுவா ளுடையாய்
உழையார் கரவா
உமையாள் கணவா
விழவா ரும்வெணா
வலின்மே வியஎம்
அழகா எனும்ஆ
யிழையாள் அவளே. 1

கொலையார் கரியின்
னுரிமூ டியனே
மலையார் சிலையா
வளைவித் தவனே
விலையா லெனையா
ளும்வெண்நா வலுளாய்
நிலையா அருளாய்
எனும்நே ரிழையே. 2

காலா லுயிர்கா
லனைவீ டுசெய்தாய்
பாலோ டுநெய்யா
டியபால் வணனே
வேலா டுகையா
யெம்வெண்நா வலுளாய்
ஆலார் நிழலாய்
எனும்ஆ யிழையே. 3

சுறவக் கொடிகொண்
டவன்நீ றதுவாய்
உறநெற் றிவிழித்
தஎம்உத் தமனே
விறல்மிக் ககரிக்
கருள்செய் தவனே
அறமிக் கதுவென்
னுமென்ஆ யிழையே. 4

செங்கட் பெயர்கொண்
டவன்செம் பியர்கோன்
அங்கட் கருணை
பெரிதா யவனே
வெங்கண் விடையா
யெம்வெண்நா வலுளாய்
அங்கத் தயர்வா
யினள்ஆ யிழையே. 5

குன்றே யமர்வாய்
கொலையார் புலியின்
தன்தோ லுடையாய்
சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன்
றைவெண்நா வலுளே
நின்றா யருளாய்
எனும்நே ரிழையே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

மலையன் றெடுத்த
அரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன்
றியதூ மழுவா
விலையா லெனையா
ளும்வெண்நா வலுளாய்
அலசா மல்நல்காய்
எனும்ஆ யிழையே. 8

திருவார் தருநா
ரணன்நான் முகனும்
மருவா வெருவா
அழலாய் நிமிர்ந்தாய்
விரையா ரும்வெண்நா
வலுள்மே வியஎம்
அரவா எனும்ஆ
யிழையா ளவளே. 9

புத்தர் பலரோ
டமண்பொய்த் தவர்கள்
ஒத்தவ் வுரைசொல்
லிவையோ ரகிலார்
மெய்த்தே வர்வணங்
கும்வெண்நா வலுளாய்
அத்தா அருளாய்
எனும்ஆ யிழையே. 10

வெண்நா வலமர்ந்
துறைவே தியனைக்
கண்ணார் கமழ்கா
ழியர்தந் தலைவன்
பண்ணோ டிவைபா
டியபத் தும்வல்லார்
விண்ணோ ரவரேத்
தவிரும் புவரே.

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments