சுண்ணவெண் ணீறணி பாடல் வரிகள் (cunnaven nirani) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்குருகாவூர் – திருக்கருகாவூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்குருகாவூர் – திருக்கருகாவூர்
சுவாமி : வெள்ளடைநாதர்
அம்பாள் : காவியங்கண்ணி

சுண்ணவெண் ணீறணி

சுண்ணவெண் ணீறணி
மார்பில் தோல்புனைந்
தெண்ணரும் பல்கணம்
ஏத்தநின் றாடுவார்
விண்ணமர் பைம்பொழில்
வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம்
பிஞ்ஞக னாரே. 1

திரைபுல்கு கங்கை
திகழ்சடை வைத்து
வரைமக ளோடுடன்
ஆடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில்
வெள்ளடை மேவிய
அரை மல்கு வாளர
வாட்டுகந் தீரே. 2

அடையலர் தொல்நகர்
மூன்றெரித் தன்ன
நடைமட மங்கையொர்
பாகம் நயந்து
விடையுகந் தேறுதிர்
வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச்
சங்கர னீரே. 3

வளங்கிளர் கங்கை
மடவர லோடு
களம்பட ஆடுதிர்
காடரங் காக
விளங்கிய தண்பொழில்
வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை
யெம்பெரு மானே. 4

சுரிகுழல் நல்ல
துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டிடை
யாடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில்
வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை
எந்தை பிரானே. 5

காவியங் கண்மட
வாளொடுங் காட்டிடைத்
தீயக லேந்திநின்
றாடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில்
வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்துகொண்
டாட்டுகந் தீரே.

இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment