சிட்ட னைச்சிவ பாடல் வரிகள் (citta naicciva) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பாண்டிக்கொடுமுடி – கொடுமுடி தலம் கொங்குநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : கொங்குநாடு
தலம் : திருப்பாண்டிக்கொடுமுடி – கொடுமுடி
சுவாமி : கொடுமுடிநாதர்
அம்பாள் : பண்மொழிநாயகி

சிட்ட னைச்சிவ

சிட்ட னைச்சிவ
னைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை
ஆல நிழலமர்
பட்ட னைத்திருப்
பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ
நம்வினை நாசமே. 1

பிரமன் மாலறி
யாத பெருமையன்
தரும மாகிய
தத்துவன் எம்பிரான்
பரம னாருறை
பாண்டிக் கொடுமுடி
கரும மாகத்
தொழுமட நெஞ்சமே. 2

ஊச லாளல்லள்
ஒண்கழ லாளல்லள்
தேச மாந்திருப்
பாண்டிக் கொடுமுடி
ஈச னேயெனும்
இத்தனை யல்லது
பேசு மாறறி
யாளொரு பேதையே. 3

தூண்டி யசுடர்
போலொக்குஞ் சோதியான்
காண்ட லுமெளி
யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி
மேய பரமனைக்
காண்டு மென்பவர்க்
கேதுங் கருத்தொணான். 4

நெருக்கி யம்முடி
நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந்
தேத்த இருந்தவன்
திருக்கொ டுமுடி
யென்றலுந் தீவினைக்
கருக்கெ டுமிது
கைகண்ட யோகமே. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment