செய்யர் வெண்ணூலர் பாடல் வரிகள் (ceyyar vennular) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்புகலூர்
சுவாமி : அக்கினீசுவரர்
அம்பாள் : கருந்தார்குழலியம்மை
செய்யர் வெண்ணூலர்
செய்யர் வெண்ணூலர்
கருமான் மறிதுள்ளுங்
கையர் கனைகழல்
கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின்
றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப்
புரிசடை யாரே. 1
மேகநல் ஊர்தியர்
மின்போல் மிளிர்சடைப்
பாக மதிநுத
லாளையொர் பாகத்தர்
நாக வளையினர்
நாக வுடையினர்
போகர் புகலூர்ப்
புரிசடை யாரே. 2
பெருந்தாழ் சடைமுடி
மேற்பிறை சூடிக்
கருந்தாழ் குழலியுந்
தாமுங் கலந்து
திருந்தா மனமுடை
யார்திறத் தென்றும்
பொருந்தார் புகலூர்ப்
புரிசடை யாரே. 3
அக்கார் அணிவடம்
ஆகத்தர் நாகத்தர்
நக்கார் இளமதிக்
கண்ணியர் நாடொறும்
உக்கார் தலைபிடித்
துண்பலிக் கூர்தொறும்
புக்கார் புகலூர்ப்
புரிசடை யாரே. 4
ஆர்த்தார் உயிரடும்
அந்தகன் றன்னுடல்
பேர்த்தார் பிறைநுதற்
பெண்ணின்நல் லாள்உட்கக்
கூர்த்தார் மருப்பிற்
கொலைக்களிற் றீருரி
போர்த்தார் புகலூர்ப்
புரிசடை யாரே. 5
தூமன் சுறவந்
துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங்
காய்ந்தமுக் கண்ணினர்
சேம நெறியினர்
சீரை யுடையவர்
பூமன் புகலூர்ப்
புரிசடை யாரே. 6
உதைத்தார் மறலி
உருளவொர் காலாற்
சிதைத்தார் திகழ்தக்கன்
செய்தநல் வேள்வி
பதைத்தார் சிரங்கரங்
கொண்டுவெய் யோன்கண்
புதைத்தார் புகலூர்ப்
புரிசடை யாரே. 7
கரிந்தார் தலையர்
கடிமதில் மூன்றுந்
தெரிந்தார் கணைகள்
செழுந்தழ லுண்ண
விரிந்தார் சடைமேல்
விரிபுனற் கங்கை
புரிந்தார் புகலூர்ப்
புரிசடை யாரே. 8
ஈண்டார் அழலி
னிருவருங் கைதொழ
நீண்டார் நெடுந்தடு
மாற்ற நிலையஞ்ச
மாண்டார்தம் என்பு
மலர்க்கொன்றை மாலையும்
பூண்டார் புகலூர்ப்
புரிசடை யாரே. 9
கறுத்தார் மணிகண்டங்
கால்விர லூன்றி
இறுத்தார் இலங்கையர்
கோன்முடி பத்தும்
அறுத்தார் புலனைந்தும்
ஆயிழை பாகம்
பொறுத்தார் புகலூர்ப்
புரிசடை யாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்