அந்திவட் டத்திங்கட் பாடல் வரிகள் (antivat tattinkat) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

அந்திவட் டத்திங்கட்

அந்திவட் டத்திங்கட் கண்ணியன்
ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின்
றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை
யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை
வளாவிய நம்பனையே. 1

பாடகக் கால்கழற் கால்பரி
திக்கதி ருக்கவந்தி
நாடகக் கால்நங்கை முன்செங்கண்
ஏனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங்
காலெங்க ணாய்நின்றகால்
ஆடகக் காலரி மான்றேர்
வலவன்ஐ யாற்றனவே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment