Monday, December 8, 2025
HomeSivan Songs| anaimugam anavanin anbumikka

| anaimugam anavanin anbumikka

Shiva Bhajan Songs Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே , பஜனை பாடல் ‍வரிகள். சிவன் பஜனைப் பாடல்கள். Shiva Bhajanai Songs Lyrics

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

============

ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே

அவனியென்று உன்னைச் சுற்ற கனியைத் தந்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

நெற்றிக் கண்ணின் நெருப்பில் பிள்ளை பெற்றெடுத்த தந்தையே

நெற்றிக் கண்ணால் மன்மதனைச் சுட்டெரித்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

இளைய பிள்ளை முருகனிடம் சேதி கேட்ட தந்தையே

சேதி சொன்ன பிள்ளையினை சுவாமி என்ற விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

குறுஞ் சிரிப்பால் உமை மனதைக் கவர்ந்திழுத்த தந்தையே

ஒரு சிரிப்பால் முப்புரத்தை எரித்து விட்ட விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

படித் துறையில் பிள்ளை அழ ஓடி வந்த தந்தையே

அம்மை யப்பனாகி நின்று அருள் புரிந்த விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

பிரசவத்தில் பெண் துடிக்க விரைந்து வந்த தந்தையே

பிள்ளைப் பேறு பார்க்கத் தானே தாயுமான விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

சுடலைப் பொடி பூசிக் கொண்டு நடனமிடும் தந்தையே

அடியும் முடியும் காணலின்றி ஓங்கி நின்ற விந்தையே

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம்; ஓம் நமசிவாய

இந்த | anaimugam anavanin anbumikka பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, பஜனை பாடல் வரிகள் ஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments