108 chandra potri | 108 chandra deva names இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சந்திரன் 108 போற்றி | சந்திர பகவான் 108 போற்றி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

108 சந்திர பகவான் போற்றி

ஓம் அம்புலியே போற்றி

ஓம் அமுத கலையனே போற்றி

ஓம் அல்லி ஏந்தியவனே போற்றி

ஓம் அனந்தபுரத்தருள்பவனே போற்றி

ஓம் அபய கரத்தனே போற்றி

ஓம் அமைதி உருவனே போற்றி

ஓம் அன்பனே போற்றி

ஓம் அஸ்த நாதனே போற்றி

ஓம் அமுதுடன் பிறந்தவனே போற்றி

ஓம் அயர்ச்சி ஒழிப்பவனே போற்றி

ஓம் ஆரமுதே போற்றி

ஓம் ஆத்திரேய குலனே போற்றி

ஓம் இனிப்புப் பிரியனே போற்றி

ஓம் இரண்டாம் கிரகனே போற்றி

ஓம் இனியவனே போற்றி

ஓம் இணையிலானே போற்றி

ஓம் இரவிருள் அகற்றுபவனே போற்றி

ஓம் இந்தளூரில் அருள்பவனே போற்றி

ஓம் இரு கரனே போற்றி

ஓம் இரவு நாயகனே போற்றி

ஓம் ஈய உலோகனே போற்றி

ஓம் ஈரெண் கலையனே போற்றி

ஓம் ஈர்ப்பவனே போற்றி

ஓம் ஈசன் அணியே போற்றி

ஓம் உவகிப்பவனே போற்றி

ஓம் உலகாள்பவனே போற்றி

ஓம் எழில்முகனே போற்றி

ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி

ஓம் ஒணத்ததிபதியே போற்றி

ஓம் ஒளடதீசனே போற்றி

ஓம் கடகராசி அதிபதியே போற்றி

ஓம் கதாயுதனே போற்றி

ஓம் கலா நிதியே போற்றி

ஓம் காதற் தேவனே போற்றி

ஓம் குறு வடிவனே போற்றி

ஓம் குமுதப் பிரியனே போற்றி

ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி

ஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றி

ஓம் கௌரி குண்டத்தருள்பவனே போற்றி

ஓம் கௌரி ப்ரத்யதி தேவதையனே போற்றி

ஓம் சந்திரனே போற்றி

ஓம் சஞ்சீவியே போற்றி

ஓம் சதுரப் பீடனே போற்றி

ஓம் சதுரக் கோலனே போற்றி

ஓம் சமீப கிரகனே போற்றி

ஓம் சமுத்திர நாயகனே போற்றி

ஓம் சாமப் பிரியனே போற்றி

ஓம் சாந்தராயணவிரதப் பிரியனே போற்றி

ஓம் சிவபக்தனே போற்றி

ஓம் சிவனருள் வாய்த்தவனே போற்றி

ஓம் சிங்கக் கொடியனே போற்றி

ஓம் சித்ராங்கதனுக்கருளியவனே போற்றி

ஓம் தண்ணிலவே போற்றி

ஓம் தலைச்சங்காட்டில் அருள்பவனே போற்றி

ஓம் தமிழ்ப்பிரியனே போற்றி

ஓம் தண்டாயுதனே போற்றி

ஓம் தட்சன் மருகனே போற்றி

ஓம் தட்சனால் தேய்பவனே போற்றி

ஓம் தாரைப் பிரியனே போற்றி

ஓம் திருமகள் சோதரனே போற்றி

ஓம் திங்களூர்த் தேவனே போற்றி

ஓம் திருப்பாச்சூரில் அருள்பவனே போற்றி

ஓம் திங்களே போற்றி

ஓம் திருஉருவனே போற்றி

ஓம் திருப்பதியில் பூசித்தவனே போற்றி

ஓம் திருமாணிக்கூடத்தருள்பவனே போற்றி

ஓம் தென்கீழ் திசையனே போற்றி

ஓம் தேய்ந்து வளர்பவனே போற்றி

ஓம் தூவெண்மையனே போற்றி

ஓம் தொழும் பிறையே போற்றி

ஓம் நரி வாகனனே போற்றி

ஓம் நக்ஷத்ர நாயகனே போற்றி

ஓம் நெல் தானியனே போற்றி

ஓம் நீர் அதிதேவதையனே போற்றி

ஓம் பயறு விரும்பியே போற்றி

ஓம் பழையாறையில் அருள்பவனே போற்றி

ஓம் பத்துபரித் தேரனே போற்றி

ஓம் பரிவாரத் தேவனே போற்றி

ஓம் பல்பெயரனே போற்றி

ஓம் பத்தாண்டாள்பவனே போற்றி

ஓம் பாண்டவர் தலைவனே போற்றி

ஓம் பார்வதி ப்ரத்யதிதேவதையனே போற்றி

ஓம் புதன் தந்தையே போற்றி

ஓம் போற்றாரிலானே போற்றி

ஓம் பெண் கிரகமே போற்றி

ஓம் பெருமையனே போற்றி

ஓம் மதியே போற்றி

ஓம் மனமே போற்றி

ஓம் மன்மதன் குடையே போற்றி

ஓம் மகிழ்விப்பவனே போற்றி

ஓம் மாத்ரு காரகனே போற்றி

ஓம் மாலிதயத் தோன்றலே போற்றி

ஓம் முத்துப் பிரியனே போற்றி

ஓம் முருக்கு சமித்தனே போற்றி

ஓம் முத்து விமானனே போற்றி

ஓம் முச்சக்கரத் தேரனே போற்றி

ஓம் மூலிகை நாதனே போற்றி

ஓம் மேற்கு நோக்கனே போற்றி

ஓம் ரோகிணித் தலைவனே போற்றி

ஓம் ரோகமழிப்பவனே போற்றி

ஓம் வைசியனே போற்றி

ஓம் வில்லேந்தியவனே போற்றி

ஓம் விண்ணோர் திலகமே போற்றி

ஓம் விடங்கன் இடக்கண்ணே போற்றி

ஓம் விடவேகந் தணித்தவனே போற்றி

ஓம் வெண்குடையனே போற்றி

ஓம் வெள்அலரிப் பிரியனே போற்றி

ஓம் வெண் திங்களே போற்றி

============

சந்திர பகவான் வழிபாடு

சந்திர பகவான் குறித்த‌ சில முக்கியமான தகவல்கள் : சந்திரனுக்குரிய நாட்களில் அவருக்குரிய மந்திரங்கள் மற்றும், போற்றி பாடலை பாடி அவரின் அருளைப் பெறலாம். மன நிம்மதியும், அழகு, பொழிவு பெற விரும்புபவர்கள் தொடர்ந்து சந்திர மந்திரம், போற்றியை சொல்லி வழிபடவும்.

மனோகாரகனாக சந்திரனே உடலுக்கும் காரணமானவன். ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு ஜாதகருக்குச் சந்திரபலமே மூலபலமாகும். ஜென்ம லக்கினத்தைக் கொண்டு பலன்கள் சொல்லும்போது கூட சந்திர லக்னத்தையும் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. உலக வாழ்வுக்கு சரீர பலம் முக்கியம், சரீர பலத்திற்கு மனவளம் அடிப்படை சந்திரன் பலம் பெற்றிருந்தால் மேற்சொன்ன இரண்டையுமே அடைய முடியும்.

மன அமைதி, அழகு பெற சொல்ல வேண்டிய சந்திர பகவானுக்குறிய மந்திரம்

பெளர்ணமி தினங்களிலும், திங்கட் கிழமை தோறும் (4ம் பிறை தவிர) இரவில் 8 மணி முதல் 9 மணி வரை கீழே குறிப்பிட்டுள்ள ஸ்ரீ சந்திர பகவானுக்கு உரிய மந்திரங்களை கிழக்கு திசை பார்த்து அமர்ந்து குறைந்தது 27 முறை, அதிகபட்சம் 108 முறை ஜெபிக்கவும்.

============

சந்திரன் மந்திரம்:

ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ

============

சந்திரன் மூல மந்திரம்

“ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக சந்திராய நமஹ”,

இந்த மூல மந்திரத்தை 48 நாட்களில் 10,008 முறை சொல்ல வேண்டும்.

============

சந்திரனுக்கு உரிய ஸ்தோத்திரம்

ததி சங்க துஷாராபம்

ஷீரோதார்ணவஸம்பவம்!

நமாமி சசினம் ஸோமம்

சம்போர் மகுடபூஷணம்!

============

சந்திர காயத்ரி மந்திரம்

பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி|

தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||

இந்த சந்திரன் 108 போற்றி | சந்திர பகவான் 108 போற்றி | 108 chandra deva potri பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், 108 போற்றிகள், நவக்கிரகங்கள் சந்திரன் 108 போற்றி | சந்திர பகவான் 108 போற்றி சந்திரன் 108 போற்றி | சந்திர பகவான் 108 போற்றி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment