Thursday, November 13, 2025
HomeMurugar SongsVetrivel veeravel sutri vantha pagaivar thannai | வெற்றிவேல் வீரவேல் பாடல் வரிகள்

Vetrivel veeravel sutri vantha pagaivar thannai | வெற்றிவேல் வீரவேல் பாடல் வரிகள்

Vetrivel Veeravel sutri vantha pagaivar thannai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் வெற்றிவேல்! வீரவேல்! காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

வெற்றிவேல்! வீரவேல்! சுற்றிவந்த பகைவர் தம்மைத் தோள் நடுங்க – கந்தன் கருணை படத்தில் முருகன் பாடல் வரிகள். Vetrivel Veeravel sutri vantha pagaivar thannai from Kandhan Karunai movie sung by T. M. Sounderarajan. Murugan Devotional Song Tamil lyrics.

============

வெற்றிவேல்! வீரவேல்!

சுற்றிவந்த பகைவர் தம்மைத்

தோள் நடுங்க வைத்த எங்கள்

சக்திவேல்! ஞான சக்திவேல்!

ஆதிசக்தி அன்னை தந்த ஞானவேல்!

அசுரர் தம்மை அஞ்சவைத்த வீரவேல்!

மோதி அந்தக் குன்றழித்த சக்திவேல்!

முவர் தேவர் வாழ்த்தவந்த வெற்றிவேல்!

(வெற்றிவேல்…வீரவேல்)

தெய்வம் உண்டு தெய்வம் உண்டு என்றுசொல்லும் வெற்றிவேல்!

தெய்வ பக்தி உள்ளவர்க்குக் கைகொடுக்கும் வீரவேல்!

எய்தபின்பு மீண்டும் கந்தன் கையில்வந்து நின்றவேல்!

எங்கும் வெற்றி எதிலும் வெற்றி காணும் எங்கள் சக்திவேல்!

(வெற்றிவேல்…வீரவேல்)

வானத்தோடு பூமிதொட்டு வளர்ந்து நிற்கும் மாயவேல்!

இமயம் தொட்டுக் குமரிமட்டும் காத்து நிற்கும் சக்திவேல்!

ஆதிவேல்! அழகு வேல்! அன்பு காட்டும் தூயவேல்!

அகிலமுற்றும் புகழ்பரப்ப வேலெடுத்த முருகவேல்!

(வெற்றிவேல்…வீரவேல்)

இந்த | vetrivel veeravel sutri vantha pagaivar thannai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs வெற்றிவேல்! வீரவேல்! போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments