Subramanya Bhujangam Lyrics in Tamil | ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சுப்ரமண்ய புஜங்கம் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ

மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா

விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி .. 1 ..

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்

ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்

சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே

முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் .. 2 ..

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்

மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்

மஹீதேவதேவம் மஹாவேத பாவம்

மஹாதேவ பாலம் பஜே லோகபா லம் .. 3 ..

யதா ஸந்நிதானம் கதாமானவா மே

பவாம் போதிபாரம் கதாஸ்தே ததைவ

இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் .. 4 ..

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா

ததைவாபத ஸந்நிதெள ஸேவதாம் மே

இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் .. 5 ..

கிரெள மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா

ததா பர்வதே ராஜதே தேஸ்தி ரூடா

இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூடா

ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து .. 6 ..

மஹாம்போதி தீரே மஹாபாபசோரே

முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே

குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்

ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் .. 7 ..

லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே

ஸுமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணிக்ய மஞ்சே

ஸமுத்யஸ் ஸஹஸ்ரார்க துல்ய ப்ரகாசம்

ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் .. 8 ..

ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே

மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே

மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த

ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே .. 9 ..

ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்

க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்

லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்

கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் .. 10 ..

புளிந்தேச கன்யாக நாபோக துங்க

ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம்

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர

ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் .. 11 ..

விதெளக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்

நிரஸ்தே பசுண்டான் த்விஷத்காலதண்டான்

ஹதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண செளண்டான்

ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் .. 12 ..

ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு

ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்

ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா

ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் .. 13 ..

ஸ்புரன் மந்தஹாஸை ஸஹம்ஸானி சஞ்சத்

கடாக்ஷாவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி

ஸுதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸூனோ

தவாலோகயே ஷண்முகாம் போரு ஹாணி .. 14 ..

விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்

தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு

மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்

பவேத்தே தயாசீல கா நாமஹானி .. 15 ..

ஸுதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா

ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்

ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய

கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய .. 16 ..

ஸ்புரத்ரத் ன கேயூரஹாராபிராம ..

ஸ்சலத் குண்டல ச்ரீலஸத் கண்டபாக

கடெள பீதவாஸா கரே சாருசக்தி

புரஸ்தான் மமாஸ்தாம் புராரேஸ் தனூஜ .. 17 ..

இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான் ப்ரஸார்யா

ஹவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்

ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்

ஹராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் .. 18 ..

குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா

பதே சக்தி பாணே மயூரா திரூட

புளிந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்

ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் .. 19 ..

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே

கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே

ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்

த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹத்வம் .. 20 ..

க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷுகோபா

த்தஹச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு

மயூரம் ஸமாருஹ்ய மாபைரிதி த்வம்

புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் .. 21 ..

ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா

ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேனேக வாரம்

நவக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தே

நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷா .. 22 ..

ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா

ஹதஸ்தாரக ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய

மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மன க்லேசமேகம்

ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி .. 23 ..

அஹம் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ

பவான் தீனபந்து ஸ்த்வதன்யம் நயாசே

பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்

மமாதிம் த்ருதம் நாசயோமா ஸுதத்வம் .. 24 ..

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ

ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த

பிசாசாஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்

விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே .. 25 ..

த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதெள ஸ்கந்தகீர்த்தி

முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்

கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்

குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா .. 26 ..

முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா

மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா

ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே

குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே .. 27 ..

களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா

நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா

யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்

ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார .. 28 ..

ம்ருகா பக்ஷிணோ தம்சகாயே சதுஷ்டா

ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே

பவச்சக்தி தீக்ஷ்ணாக்ர பின்னா ஸுதூரே

விநச்யந்து தே சூர்ணித க்ரெளஞ்ச சைல .. 29 ..

ஜநித்ரீ பிதாச ஸ்வபுத்ரா பராதம்

ஸஹேதே ந கிம் தேவசேனாதி நாத

அஹம் சாதிபாலோ பவான் லோக தாத

க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச .. 30 ..

நம கேகினே சக்தயே சாபி துப்யம்

நமச்சாக துப்யம் நம குக்குடாய

நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்

புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து .. 31 ..

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்

ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே

ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ

ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸூனோ .. 32 ..

புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய

படேத் பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய

ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்

லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ .. 33 ..

============

சுப்ரமண்ய‌ புஜங்கம் தோன்றிய‌ வரலாறு | Subramanya Bhujangam History in Tamil

புஜங்கம்’ என்றால் ‘தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு’ என்று பொருள். இச்சொல் வடமொழியில் உள்ள ஒருவகை யாப்பைக் குறிக்கும். இப்புஜங்கக் கவியுள் அமைந்து கிடக்கும் சொற்கோவை பாம்பொன்று வளைந்து வளைந்து செல்லுவது போல் இருப்பதால் இத்தகைய கவிக்குப் புஜங்கம் எனப் பெயருண்டாயிற்று.

ஸ்ரீ ஆதிசங்கரரின் கல்வி, தவம், யோகம் முதலியவற்றின் மேன்மையைக் கண்டு பொறாமை அடைந்த அபிநவ குப்தர் என்ற புலவரொருவர் மந்திர ஏவலால் பகவத்பாதர்கள் காச நோயால் துன்புறச் செய்தார். இந்நோயால் இவர் தாங்கமுடியாதவாறு துடித்துத் தவித்தார். ஒருநாளிரவு சிவபரம்பொருள் இவருடைய கனவில் தோன்றி ‘ஜயந்தி புரம்’ எனும் திருத்தலத்தில் சூரபன்மாவை வென்றழித்துவிட்டு, ‘ஜய வின்ப வடிவமாய்’ விளங்கும் என் குமாரனாகிய செந்திற்குமரனைக் கண்டு வழிபட்டால் இக்கொடிய வியாதி அடியோடு உன்னை விட்டு நீங்கும் என்று கூறித் திருநீறும் அளித்தருளினார். ஆச்சாரியர் அதனை ஏற்று அணிந்து தம்மைப் பிடித்திருந்த நோய் நீங்கப்பெற்றார்.

============

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் :

மறுநாள் தம்முடிய யோக சத்தியால் திருச்செந்தூர் என வழங்கப் பெறும் ஜயந்தி புரத்தை அடைந்தார். அங்கு ஆதிசேடன் என்னும் தெய்வ நாகம் திருச்செந்தில்நாதன் திருவடிகளில் வழிபாடு செய்தலைக் கண்ணுற்றார். உடனே ‘பாம்பு’ எனும் பொருளைத் தரும் ‘புஜங்கம்’ என்னும் பெயரைக் கொண்ட புது வகை யாப்பில் வடமொழியில் முப்பத்து மூன்று கவிகள் கொண்ட திருப்பாமாலை படைத்துத் திருச்செந்திலாதிபன் திருவடிக்குச் சூட்டினார். இது தான் ‘திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம்’ தோன்றிய வரலாறாகும்.

திருச்சீரலைவாய் என்றழைக்கப்படும் திருச்செந்துர் செந்திலாண்டவரை மனமுருகி வேண்டி அங்கு வழங்கப்படும் பன்னீர் இலை விபூதியை சப்பிட்டதும் அவரின் வயிற்றுவலி அவதி நீங்கி குணமடைந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆதிசங்கரர் செந்திலாண்டவரை துதித்த் 33 ஸ்லோகங்களை இயற்றினார். இதுவே ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் ஆகும். இந்த ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கத்தை யார் ஒருவர் மனமுருக பாராயணம் செய்கிறாரோ அவரின் நோய் மற்றும் தீராத பிரச்னைகள் தீர்ந்து நல்வழியை அடைவார்கள்.

இந்த | subramanya bhujangam lyrics tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, Mantras, Stotram சுப்ரமண்ய புஜங்கம் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment