Title : முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! முருகன் பாடல் வரிகள்.Muruganai Koopittu Murayitta Perukku – TM Soundarrajan – Murugan Devotional Song lyrics

============

முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு

முற்றிய வினை தீருமே!

உடல் பற்றிய பிணி ஆறுமே!

வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற

மெத்த இன்பம் சேருமே!!

(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு

குறைகள் யாவும் போகுமே!

அவர் குடும்பம் தழைத் தோங்குமே!

சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால்

சகல பயம் நீங்குமே!!

(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால்

அருகில் ஓடி வருவான்!

அன்பு பெருகி அருள் புரிவான்!

அந்தக் கருணை உருவான குருபரன்

என்றுமே கைவிடாமல் ஆளுவான்!!

(அப்பன் முருகனைக் கூப்பிட்டு)

கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு

காரியம் கைகூடுமே!

பகை மாறி உறவாடுமே!

சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி

மேன்மை உயர்வாகுமே!!

(ஐயன் முருகனைக் கூப்பிட்டு)

ஐயன் முருகனைக் கூப்பிட்டு…

ஐயன் முருகனைக் கூப்பிட்டு…

என் ஐயா…என் ஐயா…

இந்த | muruganai koopittu murayitta perukku பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள்,  Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல் முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment