God Murugan Mantra Collection In Tamil இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் முருகனின் மந்திரங்கள் | God Murugan Mantra Collection In Tamil காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஓம் தத் புருசாய வித்மஹே

மகேஷ்வர புத்ராய தீமஹி

தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே

மஹாதபாயை தீமஹி!

தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்!

============

முருகன் போற்றி!! | Murugan Potri Tamil

ஓம் ஆறுமுகனே போற்றி

ஓம் ஆண்டியே போற்றி

ஓம் அரன் மகனே போற்றி

ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி

ஓம் அழகா போற்றி

ஓம் அபயா போற்றி

ஓம் ஆதிமூலமே போற்றி

ஓம் ஆவினன் குடியோய் போற்றி

ஓம் இறைவனே போற்றி

ஓம் இளையவனே போற்றி

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடரைக் களைவோனே போற்றி

ஓம் ஈசன் மைந்தனே போற்றி

ஓம் ஈராறு கண்ணனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஐயனே போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

ஓம் ஒன்றே போற்றி

ஓம் ஓங்காரனே போற்றி

ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி

ஓம் ஔவைக்கருளியவனே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி

ஓம் கந்தனே போற்றி

ஓம் கடம்பனே போற்றி

ஓம் கவசப்பிரியனே போற்றி

ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

ஓம் கிரிராஜனே போற்றி

ஓம் கிருபாநிதியே போற்றி

ஓம் குகனே போற்றி

ஓம் குமரனே போற்றி

ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி

ஓம் குறத்தி நாதனே போற்றி

ஓம் குரவனே போற்றி

ஓம் குருபரனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

ஓம் சஷ்டி நாயகனே போற்றி

ஓம் சரவணபவனே போற்றி

ஓம் சரணாகதியே போற்றி

ஓம் சத்ரு சங்காரனே போற்றி

ஓம் சர்வேஸ்வரனே போற்றி

ஓம் சிக்கல்பதியே போற்றி

ஓம் சிங்காரனே போற்றி

ஓம் சுப்பிரமணியனே போற்றி

ஓம் சுரபூபதியே போற்றி

ஓம் சுந்தரனே போற்றி

ஓம் சுகுமாரனே போற்றி

ஓம் சுவாமிநாதனே போற்றி

ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி

ஓம் சூழ் ஒளியே போற்றி

ஓம் சூரசம்ஹாரனே போற்றி

ஓம் செல்வனே போற்றி

ஓம் செந்தூர்க்காவலனே போற்றி

ஓம் சேகரனே போற்றி

ஓம் சேவகனே போற்றி

ஓம் சேனாபதியே போற்றி

ஓம் சேவற்கொடியோனே போற்றி

ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி

ஓம் சோலையப்பனே போற்றி

ஓம் ஞானியே போற்றி

ஓம் ஞாயிறே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

ஓம் ஞானோபதேசியே போற்றி

ஓம் தணிகாசலனே போற்றி

ஓம் தயாபரனே போற்றி

ஓம் தண்டாயுதபாணியே போற்றி

ஓம் தகப்பன் சாமியே போற்றி

ஓம் திருவே போற்றி

ஓம் திங்களே போற்றி

ஓம் திருவருளே போற்றி

ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி

ஓம் துணைவா போற்றி

ஓம் துரந்தரா போற்றி

ஓம் தென்பரங்குன்றனே போற்றி

ஓம் தெவிட்டா இன்பமே போற்றி

ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தேவசேனாபதியே போற்றி

ஓம் தேவனே போற்றி

ஓம் தேயனே போற்றி

ஓம் நாதனே போற்றி

ஓம் நிமலனே போற்றி

ஓம் நிறணந்தவனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பரப்பிரம்மமே போற்றி

ஓம் பழனியாண்டவனே போற்றி

ஓம் பாலகுமாரனே போற்றி

ஓம் பன்னிரு கையனே போற்றி

ஓம் பகை ஒழிப்பவனே போற்றி

ஓம் போகர் நாதனே போற்றி

============

முருகன் மந்திரம்

சூரசம்ஹாரனாய் விளங்கும் முருகப் பெருமானை முறைப்படி வழிபடுவதன் மூலம் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். அல்லல் தரும் தொல்லைகள் யாவும் நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். வேலை, திருமணம், குழந்தைப் பேறு, மற்றும் சகல பாக்கியங்களும் கிட்டும்.

============

முருகன் மூல மந்திரம்

ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ

எதிர்மறை, எதிர்ப்பு எதிரி, கண் திருஷ்டியை அழிக்கும் முருகன் ஸ்துதி

============

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்த்தவம்

வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை. இந்தப் பாடலை ஜெபம் செய்வதன் மூலம் நம்மை தீமைகள் அணுகாது காத்துக் கொள்ளலாம்.

1. ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ

ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்

2. ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ

ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்

3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ

ஓம் _ ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்

4. ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ

ஓம் _ ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்

5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ

ஓம் _ அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்

6. ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ

ஓம் _ ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்

7. ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ

ஓம் _ ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்

8. ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ

ஓம் _ பேரின்பச் செல்வத்தின் (முக்தியின்பம்) தலைவனுக்கு வணக்கம்

9. ஓம் நரபதி பதயே நமோ நம ஹ

ஓம் _ அரசர் தலைவனுக்கு வணக்கம்

10. ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ

ஓம் _ தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்

11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ

ஓம் _ நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்

12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ

ஓம் _ ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம்

13. ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ

ஓம் _ கவியரசர் தலைவனுக்கு வணக்கம்

14. ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ

ஓம் _ தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்

15. ஓம் இகபர பதயே நமோ நம ஹ

ஓம் _ இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்

16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ

ஓம் _ திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்

17. ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ

ஓம் _ மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்

18. ஓம் நயநய பதயே நமோ நம ஹ

ஓம் _ மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்

19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ

ஓம் _ அழகுருவான தலைவனுக்கு வணக்கம்

20. ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ

ஓம் _ தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்

21. ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ

ஓம் _ வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்

22. ஓம் மல்ல பதயே நமோ நம ஹ

ஓம் _ மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்

23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ

ஓம் _ கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்

24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ

ஓம் _ கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்

25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ

ஓம் _ சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்

26. ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ

ஓம் _ வேள்வித் தலைவனுக்கு வணக்கம்

27. ஓம் அபேத பதயே நமோ நம ஹ

ஓம் _ வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்

28. ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ

ஓம் _ மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்

29. ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ

ஓம் _ சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்

30. ஓம் மயூர பதயே நமோ நம ஹ

ஓம் _ மயூர நாதனுக்கு வணக்கம்

31. ஓம் பூத பதயே நமோ நம ஹ

ஓம் _ பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்

32. ஓம் வேத பதயே நமோ நம ஹ

ஓம் _ வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்

33. ஓம் புராண பதயே நமோ நம ஹ

ஓம் _ புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்

34. ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ

ஓம் _ ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்

35. ஓம் பக்த பதயே நமோ நம ஹ

ஓம் _ அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்

36. ஓம் முக்த பதயே நமோ நம ஹ

ஓம் _ பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்

37. ஓம் அகார பதயே நமோ நம ஹ

ஓம் _ அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

38. ஓம் உகார பதயே நமோ நம ஹ

ஓம் _ உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

39. ஓம் மகார பதயே நமோ நம ஹ

ஓம் _ மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்

40. ஓம் விகாச பதயே நமோ நம ஹ

ஓம் _ எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்

41. ஓம் ஆதி பதயே நமோ நம ஹ

ஓம் _ எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்

42. ஓம் பூதி பதயே நமோ நம ஹ

ஓம் _ சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்

43. ஓம் அமார பதயே நமோ நம ஹ

ஓம் _ மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்

44. ஓம் குமார பதயே நமோ நம ஹ.

ஓம் _ குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்.

ஸ்ரீ குமாரஸ்த்தவம் முற்றிற்று.

============

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்

ஓம் முருகா, குரு முருகா,

அருள் முருகா, ஆனந்த முருகா

சிவசக்தி பாலகனே

ஷண்முகனே சடாக்ஷ்ரனே

என் வாக்கிலும் நினைவிலும்

நின்று காக்க

ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா

============

ஆறெழுத்து மந்திரத்தின் அற்புத மகிமை :

ஷண்முக சடாட்சரம் – ஷட் என்றால் ஆறு – ஆறுமுகப் பெருமானின் சரஹனபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் ஜெபத்தால் வாழ்வில் வளமும் நலமும் பெருகும்.

1. சரஹணபவ என தொடர்ந்து ஜபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும

2. ரஹணபவச என தொடர்ந்து ஜபித்து வர செல்வம் செல்வாக்கு பெறகும்

3. ஹணபவசர என தொடர்ந்து ஜெபித்து வர பகை, பிணி நோய்கள் தீரும்.

4. ணபவசரஹ என தொடர்ந்து ஜெபித்து வர எதிர்ப்புகள், எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.

5. பவசரஹண என தொடர்ந்து ஜெபித்து வர உலகத்து உயிர்கள் யாவும் நம்மை அவிரும்பும்

6. வசரஹணப என தொடர்ந்து ஜெபித்து வர எதிரிகளின் சதி, அவர்களால் வரும்

இந்த முருகனின் மந்திரங்கள் | God Murugan Mantra Collection In Tamil | murugan powerful mantra and potri in tamil பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs முருகனின் மந்திரங்கள் | God Murugan Mantra Collection In Tamil முருகனின் மந்திரங்கள் | God Murugan Mantra Collection In Tamil போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment