Friday, January 16, 2026
HomeMurugar Songs| muruga endru azhaikava

| muruga endru azhaikava

Title : முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா? இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா? முருகன் பாடல் வரிகள் : தமிழ்நம்பி. Muruga Endru Azhaikava Muthuk kumara endru azhaikava Sung By T.M.Soundararajan TM Soundarrajan – Murugan Devotional Song lyrics

============

முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா?

கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா?

எப்படி அழைப்பேன்?

உன்னை எங்கு காண்பேன்?

ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா

அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா

அருணகிரி மனம் நொந்து தவித்தபோது – நீ

அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா!

(உன்னை… முருகா என்றழைக்கவா?)

நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா

நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா – அந்தப்

பாவினிலே மனமுருகி நின்றாயப்பா – உலகுக்குப்

பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா

(உன்னை… முருகா என்றழைக்கவா?)

முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க – நீ

முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா

கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா – நீ

கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா

(உன்னை… முருகா என்றழைக்கவா?)

நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா – முருகா

நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா

என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா

என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா

(உன்னை… முருகா என்றழைக்கவா?)

இந்த | muruga endru azhaikava பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Murugan songs, T. M. Soundararajan, டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல் முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments