sastha Varavu Paadal | அய்யன் வரவு விருத்தம் இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் சாஸ்தா வரவைக் கேளாய் பாடல் | Sastha varavai kelai lyrics in tamil காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கரந்தையர்பாளையம் கம்பங்குடி வம்ச ஸ்தானியர்களால் பாடப்படும் முழுமையான சாஸ்தா வரவுப் பாடல் / அய்யன் வரவு விருத்தம். Sastha Varavu Paadal – Ayyappan Bajanai Songs – Sastha varavai kelai lyrics in tamil | Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சாஸ்தா வரவைக் கேளாய் பாடல் வரி | Sastha varavai kelai lyrics in tamil

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஸ்வாமியின் பரிவார மூர்த்திகளே சரணம் ஐயப்பா

ஸ்வாமியின் பூதகணங்களே சரணம் ஐயப்பா

எட்டவதாரங்கள் உண்டு எட்டு ஸ்வரூபங்கள் உண்டு

அஷ்ட கர்மங்களில் இவர் அறியாததொன்றும் இல்லை

சாஸ்தா வரவைக் கேளாய்

அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

சாஸ்தா வருகிறதை தைர்யமாக பார்க்க வேண்டும்

சாஸ்தா வருகிறதை தைர்யமாக பார்க்க வேண்டும்

பார்த்தவர்கள் கேட்டவர்கள் கூப்பிட்டால் அவர் வருவார்

பார்த்தவர்கள் கேட்டவர்கள் கூப்பிட்டால் அவர் வருவார்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

கருப்பன் என்ற ஒரு மாடன் கார்யமந்திரி சுடலை

கருப்பன் என்ற ஒரு மாடன் கார்யமந்திரி சுடலை

கறுத்தமேகம் போலே வாரான் கையில் கொடுவாளும் ஏந்தி

கறுத்தமேகம் போலே வாரான் கையில் கொடுவாளும் ஏந்தி

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

முன்சுடலைமாடன் வாரான் மூர்க்கதெய்வம் ஆகும் இவன்

முன்சுடலைமாடன் வாரான் மூர்க்கதெய்வம் ஆகும் இவன்

வஞ்சனை சூனியங்களை வைத்த பேரை வைக்க மாட்டான்

வஞ்சனை சூனியங்களை வைத்த பேரை வைக்க மாட்டான்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

முன்னடி மாடன் கையில் வெட்டுக்கத்தி எட்டுச்சாணில்

முன்னடி மாடன் கையில் வெட்டுக்கத்தி எட்டுச்சாணில்

ஓங்கார பேய்களை நொறுக்கி அடக்கி வாரான்

ஓங்கார பேய்களை நொறுக்கி அடக்கி வாரான்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

கரிமலை வந்தாற் போல கருத்த பூதங்கள் வெகு

கரிமலை வந்தாற் போல கருத்த பூதங்கள் வெகு

நரி ஊளையிட்டாற் போல நடுங்கும்படி அலறும்

நரி ஊளையிட்டாற் போல நடுங்கும்படி அலறும்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

ஏழைகளை அநியாயமாய் ஹிம்ஸிக்கும் பேர்களை கட்டி

ஏழைகளை அநியாயமாய் ஹிம்ஸிக்கும் பேர்களை கட்டி

இறுக்கி இழுத்து வர இசக்கி அம்மனும் உண்டு

இறுக்கி இழுத்து வர இசக்கி அம்மனும் உண்டு

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

இரும்பு கயிறும் உண்டு இன்னம் ஆயிரங்கள் உண்டு

இரும்பு கயிறும் உண்டு இன்னம் ஆயிரங்கள் உண்டு

மின்ன நமது படைகள் வரும் ஓசை முழு கர்ப்பம் கலங்கிடவே

மின்ன நமது படைகள் வரும் ஓசை முழு கர்ப்பம் கலங்கிடவே

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

இரும்பு குண்டாந்தடிகள் இரும்பு செக்குலக்கைகள்

இரும்பு குண்டாந்தடிகள் இரும்பு செக்குலக்கைகள்

இரும்பு சங்கிலியும் உண்டு பூதத்தான் வரவிற்காக

இரும்பு சங்கிலியும் உண்டு பூதத்தான் வரவிற்காக

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

பட்டராயன் தளவாய் மாடன் நல்லமாடன் நான்கு பேரு

பட்டராயன் தளவாய் மாடன் நல்லமாடன் நான்கு பேரு

பேச்சி பெரியாயி இசக்கி யக்ஷி கூட வர்றான்

பேச்சி பெரியாயி இசக்கி யக்ஷி கூட வர்றான்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

ப்ரம்மராக்ஷஸ கந்தர்வ புருஷரை தொட்ட யக்ஷி

ப்ரம்மராக்ஷஸ கந்தர்வ புருஷரை தொட்ட யக்ஷி

உன்மத்தரை மசிக்கவே உருக்கு குண்டாந்தடியும் கொண்டு

உன்மத்தரை மசிக்கவே உருக்கு குண்டாந்தடியும் கொண்டு

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

நெடுங்கொம்பு கோணக்கொம்பு நினைத்த நல் பேய்களோடு

நெடுங்கொம்பு கோணக்கொம்பு நினைத்த நல் பேய்களோடு

படா முரசடி ஓசை கேட்டு பண்டாசுரன் கலங்கினானே

படா முரசடி ஓசை கேட்டு பண்டாசுரன் கலங்கினானே

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

கடுவாய் கரடி புலி கணக்கில்லாமல் பருந்து

கடுவாய் கரடி புலி கணக்கில்லாமல் பருந்து

நடந்த மதயானைகள் சட சட எனும் ஸ்வரங்கள்

நடந்த மதயானைகள் சட சட எனும் ஸ்வரங்கள்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

இப்படி எண்ணிக்கை இல்லாமல் பூதகணங்கள்

இப்படி எண்ணிக்கை இல்லாமல் பூதகணங்கள்

கூட்டம் கூட்டமாக தானே கூடிக் கொள்ளும் ஸேனையோடு

கூட்டம் கூட்டமாக தானே கூடிக் கொள்ளும் ஸேனையோடு

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

பனைகள் போலே ரெண்டு கால்கள் பாறைகள் போல் ரெண்டு முட்டு

பனைகள் போலே ரெண்டு கால்கள் பாறைகள் போல் ரெண்டு முட்டு

தனி சிலம்பம் சல்லடம் சலங்கை குலுங்கிடவே

தனி சிலம்பம் சல்லடம் சலங்கை குலுங்கிடவே

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

குதியாட்டம் போட்டுக்கிட்டு குண்டாந்தடி பூதத்தானும்

குதியாட்டம் போட்டுக்கிட்டு குண்டாந்தடி பூதத்தானும்

சங்கிலியால் அடித்துக் கொண்டுசங்கிலி பூதத்தானும்

சங்கிலியால் அடித்துக் கொண்டு சங்கிலி பூதத்தானும்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

சித்திரச் சல்லடம் பூண்டு செல்லப்பிள்ளை ஸத்யகனும்

சித்திரச் சல்லடம் பூண்டு செல்லப்பிள்ளை ஸத்யகனும்

வெண்சாமரம் வீசியபடி வெள்ளைக்கல் பூதத்துடன்

வெண்சாமரம் வீசியபடி வெள்ளைக்கல் பூதத்துடன்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

வெண்குடை பிடித்த படி வெள்ளிப் பிரம்பு கையில் கொண்டு

வெண்குடை பிடித்த படி வெள்ளிப் பிரம்பு

கையில் கொண்டு

விபூதி தட்டமும் கையில் ஏந்தி வினைகள் களைந்திடவே

விபூதி தட்டமும் கையில் ஏந்தி வினைகள் களைந்திடவே

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

பூதத்தான் முதலான பூதப் படைகளுடன்

பூதத்தான் முதலான பூதப் படைகளுடன்

வேதத்தால் ஸ்துதி செய்யும் வேதியர் சபை நடுவே

வேதத்தால் ஸ்துதி செய்யும் வேதியர் சபை நடுவே

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

சாஸ்தா ப்ரீதி பூஜையது இந்த இடத்தில் நடக்கையிலே

சாஸ்தா ப்ரீதி பூஜையது இந்த இடத்தில்

நடக்கையிலே

யாரோ ஒருவன் ரூபத்திலே இங்கே வந்து அமர்ந்திருக்கான்

யாரோ ஒருவன் ரூபத்திலே இங்கே வந்து அமர்ந்திருக்கான்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

அறியாத பாலகராம் அய்யப்ப பக்தர்களை

அறியாத பாலகராம் அய்யப்ப பக்தர்களை

அன்பாக ஆதரிக்க அங்கே வந்து அமர்ந்திருக்கான்

அன்பாக ஆதரிக்க அங்கே வந்து அமர்ந்திருக்கான்

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

நமஸ்தே ஸ்ரீ தர்மசாஸ்த்ரே

நமஸ்தே ஸ்ரீ லோக கர்த்ரே

நமஸ்தே ஸ்ரீ ஹரிஹர புத்ரா

நமஸ்தே ஸ்ரீ பூதநாதா

சாஸ்தா வரவைக் கேளாய் அகஸ்தியர் தொழும்

சாஸ்தா வரவைக் கேளாய்

==========================================

கரந்தையர்பாளையம் சாஸ்தா புத்தகத்தில் இருந்து தட்டச்சு.

குமார் ராமநாதன் 05012017.

இந்த சாஸ்தா வரவைக் கேளாய் பாடல் | Sastha varavai kelai lyrics in tamil | sastha varavu paadal பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், Ayyappan Tamil Song Lyrics சாஸ்தா வரவைக் கேளாய் பாடல் | Sastha varavai kelai lyrics in tamil சாஸ்தா வரவைக் கேளாய் பாடல் | Sastha varavai kelai lyrics in tamil போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment