Monday, December 8, 2025
HomeAyyappan Songsகன்னிமூல கணபதி சரணம் பாடல் வரிகள் | kannimoola ganapathy saranam un thiruvadi

கன்னிமூல கணபதி சரணம் பாடல் வரிகள் | kannimoola ganapathy saranam un thiruvadi

Ayyappan Songs List இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி – T.L மகாதேவன் ஐயப்பன் பஜனை பாடல் வரிகள். Kannimoola Ganapathy Saranam Un thiruvadi Manikanadan Sannathikku Evvali T.L Magadevan Ayyappan Songs Tamil Lyrics

============

கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி

தன்னந்தனி காட்டுவழி கண்ணிரண்டில் தூக்கமின்றி

உன்னிடத்தில் வேண்டி நின்றோம் நிம்மதி (கன்னிமூல கணபதி)

கணநாதா சிவபாலா துணை வா வா வா

கணநாதா சிவபாலா துணை வா வா வா (கன்னிமூல கணபதி)

லம்போதரனே கண நாதா மஹாசாஸ்த்ரே மணிகண்டா

மஹருத்ராய மணிகண்டா மகேஷ்வராய மணிகண்டா

விக்னராஜாய கண நாதா மஹாவேதினே மணிகண்டா

மஹாரூபாயா மணிகண்டா மஹாவேதினே மணிகண்டா

பாரதம் எழுதி சாதனை கண்ட யானை முகத்தவனே

குறமகள் வள்ளி முருகனைச் சேர உறுதுணை நின்றவனே

கைலை மலையை அவ்வை காண கருணை புரிந்தவனே

காந்தமலையை நாங்களும் காண அருள்வாய் கணபதியே

ஐயா மலையோ தூரம் ஏற்பாய் இருமுடி பாரம்

நோகுது நோகுது பாதம் மனதுக்கும் பெருகுது தாகம்.

கணநாதா சிவபாலா துணை வா வா வா

கணநாதா சிவபாலா துணை வா வா வா

கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி

தன்னந்தனி காட்டுவழி கண்ணிரண்டில் தூக்கமின்றி

உன்னிடத்தில் வேண்டி நின்றோம் நிம்மதி (கன்னிமூல கணபதி)

கணநாதா சிவபாலா துணை வா வா வா

கணநாதா சிவபாலா துணை வா வா வா (கன்னிமூல கணபதி)

லம்போதரனே கண நாதா மஹாசாஸ்த்ரே மணிகண்டா

மஹருத்ராய மணிகண்டா மகேஷ்வராய மணிகண்டா

விக்னராஜாய கண நாதா மஹாவேதினே மணிகண்டா

ஹேரம்பாய கண நாதா மஹாவேதினே மணிகண்டா

சைவம் வைணவ சங்கமம் தானே ஹரிஹர சுதனாகும்

ஐயன் திருவடி எங்களைச் சேர்த்தால் வாழ்வே பொன்னாகும்

தரிசாய் கிடக்கும் எங்களின் வாசல் கரிசல் நிலமாகும்

விரிசல் விழுந்த வாழ்க்கை பரிசல் விரைந்தே கரை சேரும்

ஐயா விழியில் ஈரம் துடைத்திட தும்பிக்கை தாரும்

நெய்யாய் உருகுது நெஞ்சம் அது உன் தம்பிக்கு மஞ்சம்

கணநாதா சிவபாலா துணை வா வா வா

கணநாதா சிவபாலா துணை வா வா வா

கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி

தன்னந்தனி காட்டுவழி கண்ணிரண்டில் தூக்கமின்றி

உன்னிடத்தில் வேண்டி நின்றோம் நிம்மதி (கன்னிமூல கணபதி)

கணநாதா சிவபாலா துணை வா வா வா

கணநாதா சிவபாலா துணை வா வா வா (கன்னிமூல கணபதி)

லம்போதரனே கண நாதா மஹாசாஸ்த்ரே மணிகண்டா

மஹருத்ராய மணிகண்டா மகேஷ்வராய மணிகண்டா

ஹேரம்பாய கண நாதா மஹாரூபாய மணிகண்டா

மஹாரூபாய கண நாதா மஹாவேதினே மணிகண்டா ….

இந்த | kannimoola ganapathy saranam un thiruvadi பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், ஐயப்பன் பஜனை பாடல், Ayyappan Bajanai Paadal, T.L Magadevan Ayyappan Songs கன்னிமூல கணபதி சரணம் உன் திருவடி மணிகண்டன் சன்னிதிக்கு எவ்வழி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments